»   »  கமலுக்கு செவாலியே சிவாஜி விருது

கமலுக்கு செவாலியே சிவாஜி விருது

Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த விஜய் டிவி திரை விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர்கமல்ஹாசனுக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டது.

விஜய் டிவி சார்பில் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் நேரில் கருத்துக் கணிப்புநடத்தி அதன் மூலம் சிறந்த திரைக் கலைஞர்களுக்கு விருது வழங்கத்தீர்மானிக்கப்பட்டது.

இதுதொடர்பான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டுஅரங்கில் நடந்தது. இதில் சிறந்த நடிகராக அஜீத்தும், நடிகையாக திரிஷாவும் தேர்வுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அஜீத் விழாவுக்கு வரவில்லை. எனவே அவருக்கான விருதை திரிஷாவே பெற்றுக்கொண்டார்.

நாளைய சூப்பர் ஸ்டார் என்ற விருது நடிகர் விஜய்க்கும், இளைஞர்களின் நடிகர்விருது விக்ரமுக்கும் வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநராக கே.எஸ்.ரவிக்குமார்,நகைச்சுவை நடிகருக்கான விருது விவேக், ஒளிப்பதிவாளராக பி.சி.ஸ்ரீராம், சிறந்தபாடகராக எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடகியாக எஸ்.ஜானகி, ஸ்டண்ட் மாஸ்டராககனல் கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கலை இயக்குநராக சாபு சிரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழில் சிறந்த படமாகதேவர்மகன் தேர்வானது.

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் விருதை நடிகர் கமல்ஹாசன் பெற்றார்.அவருக்கு நடிகை சரோஜாதேவி விருதினை வழங்கினார்.

நிகழ்ச்சியில், நடிகைகள் யானா குப்தா, ரகசியா, தாரிகா, பிரியா மணி ஆகியோர்கலந்து கொண்ட கலக்கல் டான்ஸும் இடம் பெற்றது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil