கமல், ஸ்ரீதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
மும்பை: நடிகர் கமல், ஸ்ரீதேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது, மும்பையில் நடந்த திரைப்பட விழாவில்.
விஸ்வரூபத்தில் நடித்ததற்காக கமலுக்கும், இங்கிலீஷ் விங்கிலீஷுக்காக ஸ்ரீதேவிக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

ஜான்ரன் திரைப்பட விழா
மும்பை அந்தேரியில் 4வது ஜான்ரன் திரைப்பட விழா கடந்த 6 நாட்களாக நடந்தது. இந்த விழாவில் பல்வேறு படங்கள் திரையிடல் மற்றும் திரைப்பட கண்காட்சி நடைபெற்றது. விழா நிறைவு நாளில் சிறந்த நடிகர்- நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

விஸ்வரூப கமல்
இதில் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்தி நடிகர் மனோஜ் குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நடிகை ஸ்ரீதேவி
‘இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த நடிகை ஸ்ரீதேவி சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். சிறந்த நடிகருக்கான விருது நடிகர்கள் பர்ஹான் அக்தர் (பாக் மில்கா பாக்), ரன்பீர் கபூர் (பர்பி) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கய் போ சே
சிறந்த இயக்குனருக்கான விருது ‘கய் போ சே' படத்துக்காக அபிஷேக் கபூருக்கு வழங்கப்பட்டது. சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை ஆனந்த் காந்தியும், சிறந்த திரைக்கதைக்கான விருதை ஜுகி சதுர்வேதியும் பெற்றனர். சிறந்த பாடகர், பாடகிக்கான விருதை அயுஸ்மன் குரானா, அதீதி சிங் சர்மா ஆகியோர் பெற்றனர்.


Click it and Unblock the Notifications











