கமல் ஹாஸன், வைரமுத்து உள்பட 24 பேருக்கு பத்மபூஷண் விருது!

By Shankar

டெல்லி: நடிகர் கமல்ஹாஸன், கவிஞர் வைரமுத்து உள்பட 24 பேருக்கு இந்த ஆண்டுக்கான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் மற்றும் விஞ்ஞானி ரகுநாத் மாஷேல்கர் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த மல்லிகா சீனிவாசன் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பத்ம விருதுகள்

பத்ம விருதுகள்

பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

2 பேருக்கு பத்மவிபூஷண்

2 பேருக்கு பத்மவிபூஷண்

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. 2 பேருக்கு பத்ம விபூஷண் விருது, 24 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.

101 பேருக்கு பத்மஸ்ரீ விருது

101 பேருக்கு பத்மஸ்ரீ விருது

101 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது என மொத்தம் 127 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐயங்கார்

ஐயங்கார்

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைவர் மஷேல்கர் மற்றும் யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்கார் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன்- வைரமுத்து

கமல்ஹாசன்- வைரமுத்து

நடிகர் கமல்ஹாசன், எழுத்தாளர் ரஷ்கின் பாண்ட், முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மா, கவிஞர் வைரமுத்து, கடம் வித்துவான் வினாயக்ராம், கர்நாடக இசைக்கலைஞர் பர்வீன் சுல்தானா, நீதிபதி தல்வீர் பண்டாரி மற்றும் அனிதா தேசாய், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பேட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

வித்யாபாலன்- மல்லிகா சீனிவாசன்- தீபிகா

வித்யாபாலன்- மல்லிகா சீனிவாசன்- தீபிகா

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சினிமா நட்சத்திரம் பரேஷ் ராவல், வித்யா பாலன், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், இந்திய மகளிர் அணி முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா, கபடி வீரர் சுனில் தபாஸ், தமிழ் சினிமா ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த அஜய்குமார் பரிடா, தொழில்துறையை சேர்ந்த மல்லிகா ஸ்ரீனிவாசன், மருத்துவத்துறையில் தமிழகத்தை சேர்ந்த தேனும்கல் போலோஸ் ஜேக்கப், யுனானி மருத்துவத்துறையை சேர்ந்த ஹக்கீம் சையத் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர்

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 6 பேர்

இந்த விருது பெறுபவர்களில் 27 பேர் பெண்கள் ஆவர். தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரும் இந்தாண்டு பத்ம விருதுகள் பெறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X