twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் ஆஸ்கருக்குச் செல்லும் தமிழகம்... இம்முறை ‘கமலி’ எனும் சிறுமி!

    கமலி என்ற தமிழக சிறுமியைப் பற்றிய ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    By Staff
    |

    சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த சிறுமியாக கமலியைப் பற்றிய ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நடைபெற்ற 91-வது ஆஸ்கர் விருது விழாவில், இந்திய பெண்கள் குறித்த பீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ் (PERIOD END OF SENTENCE) என்ற ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் மலிவு விலை நாப்கினை தயாரித்ததை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து இப்படம் பேசியது.

    இந்நிலையில் மீண்டும் தமிழகத்தைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    என்னதிது.. ஹாலிவுட்ல இருந்து இப்படி படை எடுக்கிறாங்களே! என்னதிது.. ஹாலிவுட்ல இருந்து இப்படி படை எடுக்கிறாங்களே!

    9வயது சிறுமி:

    9வயது சிறுமி:

    மாமல்லபுரம் அருகே உள்ள மீனவ குப்பத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் சுகந்தி தம்பதியின் 9 வயது மகளான கமலியைப் பற்றியது தான் இந்த ஆவணப்படம். இது கமலி என்ற பெயரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்தை சேர்ந்த ஷாசா ரெயின்போ என்ற பெண் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.

    சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்:

    சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்:

    சிறு வயதிலிருந்தே ஸ்கேட் போர்ட் எனப்படும் சறுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவரான கமலிக்கு, அப்பகுதியினர் சிலர் கடற்கரை அருகே சிமெண்டினாலான சறுக்கு விளையாட்டு தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர். மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகள் கமலி ஸ்கேட் போர்டில் சறுக்குவதை மிகவும் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.

    கமலி ஆவணப்படம்:

    கமலி ஆவணப்படம்:

    சிலர் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிடவும் செய்கின்றனர். அப்படியாக ஒரு வீடியோவைப் பார்த்து தான், கமலி பற்றி ஆவணப்படம் எடுத்துள்ளார் ஷாசா ரெயின்போ. ஏற்கனவே படல் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது கமலி. அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த டாக்குமெண்டரிக்கான விருது, மும்பை திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது போன்றவற்றை வென்றுள்ளது.

    கமலி டிரெய்லர்:

    தற்போது இந்த டாக்குமெண்ட்ரி ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. இந்த டாக்குமெண்டரிக்கு ஆஸ்கர் கிடைக்கும் பட்சத்தில் கமலி உலகளவில் பிரபலமாவாள் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே, இணையத்தில் வெளியாகி பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளது கமலி ஆவணப்படத்தின் டிரெய்லர்.

    விழிப்புணர்வு:

    விழிப்புணர்வு:

    நமது தமிழக சிறுமி உலகளவில் பாராட்டுக்களை வாங்கப் போகிறாள் என்ற பெருமை ஒருபுறம் இருக்க, இதில் ஒரு மிகப்பெரிய வருத்தம் என்னவென்றால் எப்போதுமே நமது திறமைகளை வெளிநாட்டினரே உலகிற்கு படம் பிடித்துக் காட்டி விருதுகளைத் தட்டிச் சென்று விடுகின்றனர் என்பது தான். எப்போது நமக்கு அந்த விழிப்புணர்வு வரப்போகிறதோ தெரியவில்லை.

    English summary
    A nine-year-old Kamali Moorthy from Tamil Nadu became a sensation a year before for her skateboarding prowess and for being a prodigy. Now, once again Kamali grabbed headlines as a short film on her and her mother has been qualified for the 2020 Academy Awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X