Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கங்கனா ரனாவத்துக்கு பத்மஸ்ரீ விருது… புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்ஸ் !
டெல்லி : பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பத்ஸ்ரீ விருதை பெற்றுள்ளார். அவரை நெட்டிசன்ஸ் வாழ்த்தி வருகின்றனர்.
டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இன்று நடைபெற்ற விழாவில், 7 பேருக்கு பத்ம விபூஷன், 10 பேருக்கு பத்ம பூஷன், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் என இந்த ஆண்டு மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன

பத்ம விருதுகள்
கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

119 பேருக்கு விருதுகள்
அரசியல், கலை, இலக்கியம், விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில், 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 141 பேருக்கு அறிவிக்கப்பட்டன. 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 16 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 119 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

கொரோனாவால் தாமதம்
கொரோனா பேரிடர் காரணமாக கடந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதன்படி பத்மபூஷன் விருதுகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

புகழும் நெட்டிசன்ஸ்
இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதையடுத்து திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், ரசிகர்களும் கங்கனாவுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விருதுபெற்ற கங்கனா ரணாவத்தை நெட்டிசன்ஸ் புகழ்ந்து வருகின்றனர்.