twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி- கமலுக்கு நாளை விருது!

    By Staff
    |

    Rajini
    சென்னை: சிவாஜி படத்துக்காக ரஜினிகாந்துக்கும், தசாவதாரம் படத்துக்காக கமல்ஹாஸனுக்கும் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதினை நாளை வழங்குகிறார் முதல்வர் கருணாநிதி.

    தமிழக அரசின் சார்பில் 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

    இதில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு, சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகளை வழங்குகிறார்.

    2007-ம் ஆண்டுகளுக்கான விருதுகள் விவரம்:

    சிறந்த படம்: முதல் பரிசு- சிவாஜி,
    இரண்டாம் பரிசு- மொழி
    மூன்றாம் பரிசு- பள்ளிக்கூடம்
    சிறந்த படம்-சிறப்புப் பரிசு: பெரியார்
    பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம்-சிறப்புப் பரிசு: மிருகம்
    அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம்-முதல் பரிசு: தூவானம்

    சிறந்த நடிகர்-ரஜினிகாந்த் (சிவாஜி)
    சிறந்த நடிகை- ஜோதிகா (மொழி)
    சிறந்த நடிகர் (சிறப்புப்பரிசு)- சத்யராஜ் (பெரியார்)
    சிறந்த நடிகை (சிறப்புப்பரிசு)- பத்மபிரியா (மிருகம்)
    சிறந்த வில்லன் நடிகர்-சுமன் (சிவாஜி)

    சிறந்த குணச்சித்திர நடிகர்- எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)
    சிறந்த குணச்சித்திர நடிகை- அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)
    சிறந்த இயக்குனர்- தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்).

    சிறந்த கதாசிரியர்- எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே)
    சிறந்த உரையாடல் ஆசிரியர்- பாலாஜி சக்திவேல் (கல்லூரி)
    சிறந்த இசையமைப்பாளர்- வித்யாசாகர் (மொழி)
    சிறந்த பாடலாசிரியர்- வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்)
    சிறந்த பின்ணணி பாடகர்- ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)
    சிறந்த பின்னணி பாடகி- சின்மயி (சிவாஜி)
    சிறந்த ஒளிப்பதிவாளர்- நீரவ்ஷா (பில்லா)
    சிறந்த ஒலிப்பதிவாளர்- யு.கே.அய்யப்பன் (பில்லா)
    சிறந்த திரைப்பட தொகுப்பாளர்- சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே)
    சிறந்த கலை இயக்குனர்- தோட்டாதரணி (சிவாஜி)
    சிறந்த சண்டை பயிற்சியாளர்- அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)
    சிறந்த நடன ஆசிரியர்- பிருந்தா (தீபாவளி)
    சிறந்த ஒப்பனை கலைஞர்- ராஜேந்திரன் (பெரியார்)
    சிறந்த தையல் கலைஞர்- அனுவர்தன் (பில்லா)
    சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)- கே.பி. சேகர் (மலரினும் மெல்லிய)
    சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- மகாலட்சுமி கண்ணன் (மிருகம்).


    2008-ம் ஆண்டுக்கான விருதுகள்:

    சிறந்த படம்: முதல் பரிசு- தசாவதாரம்
    இரண்டாம் பரிசு- அபியும் நானும்
    மூன்றாம் பரிசு- சந்தோஷ் சுப்பிரமணியம்
    சிறந்த படம்-சிறப்புப் பரிசு:- மெய்ப்பொருள்
    பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம்-சிறப்புப் பரிசு: பூ
    அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளை பிரதிபலிக்கின்ற படம்-முதல் பரிசு:
    வல்லமை தாராயோ
    இரண்டாம் பரிசு- வண்ணத்துப்பூச்சி

    சிறந்த நடிகர்-கமல்ஹாசன் (தசாவதாரம்)
    சிறந்த நடிகை- சினேகா (பிரிவோம் சந்திப்போம்)
    சிறந்த நடிகர் (சிறப்புப்பரிசு)- சூர்யா (வாரணம் ஆயிரம்)
    சிறந்த நடிகை (சிறப்புப்பரிசு)- திரிஷா (அபியும் நூனும்)
    சிறந்த வில்லன் நடிகர்- ராஜேந்திரன் (நான் கடவுள்)
    சிறந்த நகைச்சுவை நடிகர்- வடிவேலு (காத்தவராயன்)
    சிறந்த நகைச்சுவை நடிகை- கோவை சரளா (உளியின் ஓசை)
    சிறந்த குணச்சித்திர நடிகர்- பிரகாஷ்ராஜ் (பல படங்கள்)
    சிறந்த குணச்சித்திர நடிகை- பூஜா (நான் கடவுள்)
    சிறந்த இயக்குனர்- ராதா மோகன் (அபியும் நானும்).

    கலைஞர் கருணாநிதி

    சிறந்த கதாசிரியர்- தமிழ்ச்செல்வன் (பூ)
    சிறந்த உரையாடல் ஆசிரியர்- கலைஞர் மு.கருணாநிதி (உளியின் ஓசை)
    சிறந்த இசையமைப்பாளர்- இளையராஜா (அஜந்தா)
    சிறந்த பாடலாசிரியர்- வாலி (தசாவதாரம்)

    சிறந்த பின்ணணி பாடகர்- பெள்ளிராஜ் (சுப்பிரமணியபுரம்)
    சிறந்த பின்னணி பாடகி- மஹதி (நெஞ்சத்தை கிள்ளாதே)
    சிறந்த ஒளிப்பதிவாளர்- ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)
    சிறந்த ஒலிப்பதிவாளர்- ரவி (வாரணம் ஆயிரம்)
    சிறந்த திரைப்பட தொகுப்பாளர்- ப்ரவீண்-ஸ்ரீகாந்த் (சரோஜா)
    சிறந்த கலை இயக்குனர்- ராஜீவன் (வாரணம் ஆயிரம்)
    சிறந்த சண்டை பயிற்சியாளர்- கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)
    சிறந்த நடன ஆசிரியர்- சிவசங்கர் (உளியின் ஓசை)
    சிறந்த ஒப்பனை கலைஞர்- மைக்கேல் வெஸ்ட்மோர்-கோதண்டபாணி (தசாவதாரம்)
    சிறந்த தையல் கலைஞர்- ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்)
    சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப்பூச்சி)
    சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)- எம்.ஏ. பிரகாஷ் (கி.மு.)
    சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- சவிதா (பல படங்கள்).

    இதுதவிர, 2006-2007 மற்றும் 2007-2008-ம் கல்வி ஆண்டுகளுக்கான எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விருதுகளையும், முதல்வர் கருணாநிதி வழங்குகிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X