twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை பார்வதிக்கு சிறந்த நடிகை விருது.. கேரள அரசு விருதுகள் அறிவிப்பு!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    நடிகை பார்வதிக்கு சிறந்த நடிகை விருது!- வீடியோ

    திருவனந்தபுரம் : வருடாவருடம் மலையாள திரையுலகில் சிறப்பாக செயல்புரிபவர்களுக்கு கேரள அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த ஆண்டும் 2017-ம் ஆண்டுக்கான கேரள அரசு விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. டேக் ஆஃப் படத்திற்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.

    சிறந்த படமாக ஓட்டமுறி வெளிச்சம், சிறந்த நடிகராக நடிகர் இந்திரன்ஸ், சிறந்த நடிகையாக பார்வதி ஆகியோர் விருதுக்குத் தேர்வாகியுள்ளனர்.

    சிறந்த இயக்குநர்

    சிறந்த இயக்குநர்

    விருது பெற்றவர்களின் முழு விபரம் வருமாறு, சிறந்த படம் : ஒட்டமுறி வெளிச்சம். சிறந்த 2வது படம் : ஈடன். சிறந்த பாப்புலர் படம் : ரக்ஷதிகாரி பைஜூ. சிறந்த இயக்குனர் : லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி (ஏ மா யூ).

    டேக் ஆஃப்

    டேக் ஆஃப்

    ஃபகத் பாசில், பார்வதி நடித்த 'Take off' பல விருதுகளை வென்றுள்ளது. சிறந்த அறிமுக இயக்குனர் : மகேஷ் நாராயண் (டேக் ஆஃப்). சிறந்த கலை இயக்குனர் : சந்தோஷ் ராமன் (டேக் ஆஃப்). சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி) : கோபிசுந்தர் (டேக் ஆப்).

    சிறந்த நடிகை

    சிறந்த நடிகை

    சிறந்த நடிகர் விருது : இந்திரன்ஸ் (ஆலொருக்கம்). சிறந்த நடிகை : பார்வதி (டேக் ஆஃப்). சிறந்த குணச்சித்திர நடிகர் : அலான்சியர் லே (தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்). சிறந்த குணச்சித்திர நடிகை : பாலி வல்சன் (ஏ மா யூ)

    சிறந்த திரைக்கதை

    சிறந்த திரைக்கதை

    சிறந்த கதை : சஜீவ் பழூர் (தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்). சிறந்த திரைக்கதை) : எம்.ஏ.நிஷாத் (கிணர்). சிறந்த திரைக்கதை (தழுவல்) : ஏ மா யூ (எஸ்.ஹரீஷ் & சஞ்சு சுரேந்திரன்). சிறந்த ஆண் குழந்தை நட்சத்திரம் : அபினந் (ஸ்வனம்). சிறந்த பெண் குழந்தை நட்சத்திரம் : நக்ஷத்திரா (ரக்ஷதிகாரி பைஜூ)

    சிறந்த இசை

    சிறந்த இசை

    சிறந்த படத்தொகுப்பாளர் : அப்பு பட்டாத்திரி (ஒட்டமுறி வெளிச்சம் & வீரம்). சிறந்த ஒளிப்பதிவாளர் : மனீஷ் மாதவன் (ஈடன்). சிறந்த இசையமைப்பாளர் : எம்.கே.அர்ஜூனன் (பயனகம்).

    சிறந்த பாடகர்

    சிறந்த பாடகர்

    சிறந்த பாடலாசிரியர் : பிரபா வர்மா (கிளின்ட்). சிறந்த பின்னணி பாடகர் : ஷபாஸ் அமன் (மாயநதி). சிறந்த பின்னணி பாடகி : சித்தாரா கிருஷ்ணகுமார் (வணமகளுண்ணுவோ, விமானம்). ஆகிய பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    English summary
    The Kerala government has been awarded best performers in Malayalam cinema annually. Kerala Government Awards for the year 2017 are now being announced. Actress parvathy getting best actress award for 'take off' movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X