யஷ் சோப்ரா நினைவு விருதை பெற்ற பாலிவுட் குயில் லதா மங்கேஷ்கர்: விழாவில் நட்சத்திர பட்டாளம்
மும்பை: பின்னணி பாடகி லதா மங்கேஷருக்கு யஷ் சோப்ரா நினைவு விருது வழங்கப்பட்டது.
மறைந்த பாலிவுட் இயக்குனர் யஷ் சோப்ராவின் நினைவாக காங்கிரஸ் தலைவரான டி. சுப்பராமி ரெட்டியின் டிஎஸ்ஆர் பவுன்டேஷன் விருது ஒன்றை வழங்க தீர்மானித்தது.
இதையடுத்து யஷ் சோப்ரா நினைவு விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது. விருதை பாலிவுட்டில் பல காலம் பாடிக் கொண்டிருக்கும் எவர்கிரீன் குயிலான லதா மங்கேஷ்கருக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் மனிஷ் திவாரி வழங்கினார்.
ரூ.10 லட்சம் ரொக்கம் மற்றும் சான்றிதழை கொண்டது இந்த விருது. இந்த ஆண்டு முதல் இனி ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். கலை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இனி யஷ் சோப்ரா நினைவு விருது வழங்கப்படும்.
விருது வழங்கும் விழாவில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

லதா
விழாவில் லதா மங்கேஷ்கருடன் நடிகைகள் ராணி முகர்ஜி மற்றும் ஹேமமாலினி.

ஸ்ரீதேவி
விருது வழங்கும் விழாவுக்கு கணவர் போனி கபூருடன் வந்திருந்த நடிகை ஸ்ரீதேவி.

மதுபாலா
விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நடிகை மதுபாலா.

சோனாலி
விழாவில் கலந்து கொண்ட நடிகை சோனாலி பெந்த்ரே.

பமிலா
லதா மங்கேஷ்கருடன் பேசும் யஷ் சோப்ராவின் மனைவி பமிலா.

விருதை பெறும் லதா
லதாவுக்கு விருதை வழங்கும் அமைச்சர் மனிஷ் திவாரி.

ஜிதேந்திரா
விழாவில் பேசும் இந்தி நடிகர் ஜிதேந்திரா.


Click it and Unblock the Notifications











