புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர் விருதுகள்

By Siva

லாஸ் ஏஞ்சல்ஸ்: புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பை படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.

2013ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில் புதுவையில் எடுக்கப்பட்ட லைப் ஆப் பைக்கு சிறந்த இயக்குனர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு மற்று சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் ஆகிய 4 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளது.

லைப் ஆப் பை படத்தின் பெரும்பாலான காட்சிகள் புதுவையில் படமாக்கப்பட்டன. படத்தின் முதல் ட்ரெய்லர் கூட சென்னையில் தான் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர் விருதுகள்

லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர் விருதுகள்

லைப் ஆப் பை படத்தை எடுத்த ஆங் லீக்கு சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த இசைக்காக லைப் ஆப் பை இசையமைப்பாளர் மைக்கேல் டான்னாவுக்கு விருது கிடைத்துள்ளது. மேலும் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவிலும் லைப் ஆப் பை விருதுகளை அள்ளியது.

2வது முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர்

2வது முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர்

தைவானைச் சேர்ந்த ஆங் லீ கடந்த 2005ம் ஆண்டு புரோக்பேக் மவுன்டெய்ன் என்ற படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்றார். அதற்கு முன்பு 2000ம் ஆண்டில் கிரவுச்சிங் டைகர், ஹிட்டன் டிராகன் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.

சென்னையில் கமலை சந்தித்த ஆங் லீ

சென்னையில் கமலை சந்தித்த ஆங் லீ

ஆங் லீ தனது படத்தை விளம்பரப்படுத்த சென்னை வந்தபோது அவர் கமல் ஹாசனை சந்தித்தார். அப்போது கமல் ஆங் லீயை பேட்டி கண்டார்.

கமலை புகழ்ந்து தள்ளிய ஆங் லீ

கமலை புகழ்ந்து தள்ளிய ஆங் லீ

கமலை சந்தித்த ஆங் லீ கூறியதாவது, கமலின் அறிவாற்றலைப் பார்த்து அசந்துவிட்டேன். அவர் என்னைப் பற்றியும், எனது படங்களைப் பற்றியும் இவ்வளவு தெரிந்து வைத்திருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. அவர் ஒரு அருமையான நடிகர் மட்டுமல்ல. சிறந்த மனிதரும் கூட. அவருக்கு உலக சினிமா பற்றி அனைத்துமே தெரிந்திருக்கிறது. என்னை அவர் பேட்டி கண்டதில் பெரு மகிழ்ச்சி என்றார்.

விஸ்வரூபம் பார்த்த ஆங் லீ

விஸ்வரூபம் பார்த்த ஆங் லீ

கமல் ஹாசன் ஆங் லீயை தனது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விஸ்வரூபம் பட டிரெய்லரைப் போட்டுக் காட்டினார். ட்ரெய்லரைப் பார்த்தே அவர் அசந்துவிட்டார். இந்த படம் கண்டிப்பாக ஹிட் தான் என்றார் ஆங் லீ.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X