கேஜே யேசுதாஸுக்கு கேரள அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது!
பிரபல பின்னணிப் பாடகரும், கர்நாடக இசை வல்லுநருமான கே.ஜே.ஜேசுதாஸுக்கு கேரள அரசு சார்பில் வியாழக்கிழமை சிறப்பு விருது வழங்கப்பட்டது.
யேசுதாஸின் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்பட்ட இந்த விருதானது ரூ.1 லட்சம் ரொக்கமும், பட்டயமும் உள்ளடக்கியதாகும். திருவனந்தபுரத்திலுள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், இந்த விருதை முதல்வர் உம்மன் சாண்டி வழங்கினார்.

விருதைப் பெற்ற பிறகு யேசுதாஸ் பேசுகையில், "மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்," என்றார்.
இந்த விழாவில் மாநில கலாசாரத் துறை அமைச்சர் கே.சி.ஜோசப், எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Comments


Click it and Unblock the Notifications