சிறந்த நடிகர்கள் விக்ரம், கரண், பிரசன்னா,ஆர்யா, சித்தார்த்: தமிழக அரசு திரைப்பட விருதுகள் பட்டியல்!
சென்னை : தமிழில் வெளியாகும் சிறந்த படங்கள், சிறந்த சின்னத்திரை சீரியல்கள், சிறந்த நடிகர், நடிகை, அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விருது வழங்கி வந்தது.
கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட இவ்விழாவிற்கு பிறகு, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக இந்த விழா நடைபெறாமல் இருந்தது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கு மொத்தமாக விருதை தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் விருது
தமிழக அரசின் விருது வழங்கும் விழா, இந்த விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ் விழாவில், மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சாமிநாதன் ஆகியோர் விருதுகளை வழங்கி வருகின்றனர். இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

விக்ரம்
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விக்ரமுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விருதை விக்ரம் பெற்றுக்கொண்டார். அதே போல ராஜா ராணி படத்தில் நடித்த ஆர்யா, சித்தார்த் எனபலர் விருதை பெற்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கிரண்
மலையன் திரைப்படத்தில் நடித்த நடிகர் கிரண், சிறந்த நடிகருக்கான விருதை கரண் பெற்று கொண்டார் அவருக்கு தங்க பதக்கமும், விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறந்த நடிகர் பிரசன்னா
அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பிரசன்னா பெற்று கொண்டார் அவருக்கு பவுன் தங்க பதக்கம், விருது சான்றிதழ் வழங்கப்பட்டது.

பசங்க
சிறந்த உரையாடலுக்கான பரிசு பசங்க திரைப்படத்திற்காக இயக்குனர் பாண்டியராஜ் பெற்று கொண்டார். அதேபோல, பசங்க திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கிஷோர், ஸ்ரீ ராம் ஆகியோருக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

நா.முத்துக்குமார்
அதே போல, 2012, 2013 மற்றும் 2014 ஆகிய மூன்று வருடங்களுக்கு சிறந்த பாடலாசிரியர் விருதை நா.முத்துக்குமார் வென்றிருந்தார். கடந்த 2017-ம் ஆண்டே பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணமடைந்துவிட்டதால், அவருக்கு பதில் இந்த மூன்று விருதுகளையும் அவரது மகன் பெற்றுக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











