குறள் 75 குறும்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்ற 'விசாரணை' புகழ் சந்திரகுமார்!
சென்னை: எழுத்தாளர் சந்திரகுமார் குறள் 75 குறும்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.
கோவையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் எம்.சந்திரகுமார். எழுத்தாளரான இவர் எழுதிய, 'லாக்கப்' என்ற நாவலை மையமாக வைத்து, இயக்குனர் வெற்றிமாறன் விசாரணை படத்தை எடுத்தார்.
இந்தப் படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

சிறந்த நடிகருக்கான விருது
இதனை தொடர்ந்து பெரும் பிரபலமானார் எழுத்தாளர் எம் சந்திரகுமார். இந்நிலையில் சந்திரகுமார் குறள் 75 என்ற குறும்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். குறல் 75 குறும்படம் தாத்தா மற்றும் பேத்திக்கு இடையிலான அன்பை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டது.

உணர்ச்சிகளின் ரோலர் கோஸ்டர்
இந்தப் படத்தை புவனேஷ்வரன் இயக்கியுள்ளார். இந்நிலையில் இப்படம் மும்பை இன்டிபென்டன்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2021 விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள சந்திரகுமார். "இந்தப் படம் உணர்ச்சிகளின் ரோலர் கோஸ்டராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதே படப்பிடிப்பில் இருந்த பார்வையாளர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

மேலும் 3 விருது விழாக்களில்..
ஒரு கட்டத்தில் தனது பேரக்குழந்தையை பற்றிக் கூறும் தாத்தா கதாபாத்திரத்தை நான் மிகவும் ரசித்தேன்," என்று கூறியுள்ளார். இதனிடையே குறள் 75 குறும்படம் கொல்கத்தா, டெல்லி மற்றும் புனே ஆகிய இடங்களில் நடைபெற்ற குறும்பட விழாக்களில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வில்லன் ரோலில் சந்திரகுமார்
இதனிடையே எழுத்தாளர் சந்திரகுமார் குறுதி ஆட்டம், யானை, யாதிசை ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இதில் முத்ல் இரண்டு படங்களில் வில்லன் ரோலில் நடிப்பதாகவும் யாதிசை படத்தில் சப்போர்ட்டிங் ரோலில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











