கமல் கையால் விருது.. மாஸ்டர் பட அப்டேட்.. ஜீ சினி விருது விழாவில் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்!

சென்னை: கைதி படத்திற்காக ஃபேவரைட் இயக்குநர் விருது லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டது.

நேற்று இரவு நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடந்த ஜீ தமிழ் சினி விருது விழா நிகழ்ச்சியில், உலக நாயகன் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுக்கு அந்த விருதினை வழங்கினார்.

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான அப்டேட்டையும் ரசிகர்களுக்காக கூறியுள்ளார்.

தமிழக பாஜகவின் அடுத்த தலைவராகிறாரா து. குப்புராமு? சென்னை கருத்து கேட்பு கூட்டத்தில் முடிவு?

ஃபேவரைட் இயக்குநர்

ஃபேவரைட் இயக்குநர்

2019ம் ஆண்டின் ஃபேவரைட் இயக்குநர் விருது லோகேஷ் கனகராஜுக்கு வழங்கப்பட்டது. கார்த்தி, நரேன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு பல தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்த நிலையில், ஜீ தமிழ் சினி விருது விழா நிகழ்ச்சியில் கமல் கையால் ஃபேவரைட் இயக்குநர் விருது கிடைத்துள்ளது.

விருமாண்டி தான் பிடிக்கும்

விருமாண்டி தான் பிடிக்கும்

மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஃபேவரைட் விருதை உலகநாயகன் கமல்ஹாசன் கையால் பெற்றார். விருது மேடையில், தனக்கு மிகவும் இன்ஸ்பையர் ஆன படம் விருமாண்டி தான் என்றார். அதற்கு கமல்ஹாசன் கைதி படம் எனக்கு மிகவும் பிடித்த படம் என்றார்.

மாஸ்டர் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் மேடை ஏறியதில் இருந்தே தளபதி விஜய் ரசிகர்கள் பயங்கரமாக ஆரவாரம் செய்தனர். தளபதி விஜய் பத்தி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. மாஸ்டர் படத்தில் ஒருவாரமா சேது அண்ணா நடிச்சுட்டு வருகிறார்.. இன்னும் பத்து நாளில் விஜய் - விஜய்சேதுபதி சேர்ந்து நடிக்கப் போறாங்க.. எனக்கே பயங்கர எக்ஸைட்மென்ட்டா இருக்கு என லோகேஷ் கனகராஜ் கூற அரங்கமே அதிர்ந்தது.

வைரலாகுது

வைரலாகுது

ஜீ தமிழ் சினிமா விருது விழாவில் மாஸ்டர் படம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. இது போதும் தலைவா என தளபதி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மாஸ்டர்

மாஸ்டர்

ஷிமோகாவில் படமாக்கப்பட்டு வந்த மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்குப் பிறகு மீண்டும் ஷிமோகாவில் மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X