சிறந்த நடிகராக ஆர்யா தேர்வு... சர்வதேச விருதுகளை குவிக்கும் மகாமுனி!
சென்னை : நடிகர் ஆர்யா இரட்டை வேடத்தில் வித்தியாசமான கதை களத்தில் நடித்த திரைப்படம் மகாமுனி.
இந்துஜா மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்து இருக்க மௌனகுரு பட இயக்குனர் சாந்தகுமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.
மகாமுனி சற்று தாமதமாக வெளியாகியிருந்தாலும் இன்றுவரை சர்வதேச அளவில் ஏற்கனவே பல விருதுகளை குவித்து வரும் நிலையில் தற்போது மகாமுனி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகராக ஆர்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி
தொடர் தோல்விகளை கண்டு வந்த நடிகர் ஆர்யா இப்பொழுது கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் பா ரஞ்சித் கூட்டணியில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் அனைவரையும் அசர வைக்கும் அளவிற்கு மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பலரது பாராட்டுகளையும் பெற்றார் . சார்பட்டா பரம்பரை வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான அரண்மனை3 கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆர்யா இரட்டை வேடத்தில்
இவ்வாறு படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வரும் ஆர்யா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மகாமுனி. மௌனகுரு என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சாந்தகுமார் இயக்கத்தில் வெளியான மகாமுனி திரைப்படத்தில் ஆர்யா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆக்ஷன் கலந்த திரில்லர் கதை களத்தில் உருவான இந்த திரைப்படத்தில் மஹிமா நம்பியார் மற்றும் இந்துஜா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர்.ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

சமூகப் போராளியாக
சில பிரச்சனைகளால் தாமதமாக வெளியான மகாமுனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற சூழலில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது.அந்த வகையில் முதலில் ஒன்பது சர்வதேச விருதுகளை குவித்தது. இஸ்ரேல்,பூடானின் நடைபெற்ற சர்வதேச விழாக்களிலும் 3 விருதுகளை வென்றது. நடிகை மஹிமா நம்பியார் இப்படத்தில் சமூகப் போராளியாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது சமீபத்தில் வழங்கப்பட்டது.

ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது
இந்நிலையில் அயோத்யா திரைப்பட விருது விழா நடைபெற்று வருகிறது. அதில் மகாமுனி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இந்த திரைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.இதில் இரட்டை வேடத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











