மம்மூட்டி, பார்வதி, அமலாபாலுக்கு அவார்ட்.. விஜய் சேதுபதிக்கு எந்த கேரக்டருக்கு விருதுன்னு பாருங்க !

By

திருவனந்தபுரம்: நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

Recommended Video

ரெண்டாவது கல்யாணத்திலும் சிக்கலா? அமலா பால் ஷேர் செய்த மீம்

ஒவ்வொரு வருடமும் சிறந்த திரைப்படம் மற்றும் திரைப்படக் கலைஞர்களுக்கு கேரளாவில் உள்ள, திரைப்பட விமர்சகர்கள் கில்டு விருதுகளை வழங்கி வருகிறது.

அதன்படி கடந்த ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகளை இப்போது அறிவித்துள்ளது.

கும்பளாங்கி நைட்ஸ்

கும்பளாங்கி நைட்ஸ்

இதில் சிறந்த மலையாளப் படமாக, கும்பளாங்கி நைட்ஸ் தேர்வாகி உள்ளது. இந்தப் படத்தை மது சி நாராயணன் இயக்கி இருந்தார். ஷேன் நிகம், பகத் பாசில், ஷவுபின் ஜாகிர், அன்னா பென் உட்பட பலர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மம்மூட்டி, பார்வதி

மம்மூட்டி, பார்வதி

'உயரே என்ற படத்தில் நடித்ததற்காக நடிகை பார்வதிக்கு சிறந்த நடிகை விருது அறிவிக்கப் பட்டுள்ளது. திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக இந்தப் படத்தில், பார்வதி நடித்தி ருந்தார். டோவினோ தாமஸ், ஆசிப் அலி உட்பட பலர் நடித்திருந்தனர். மனு அசோகன் இயக்கி இருந்த இந்தப் படம் ரசிகர்களால் கவனிக்கப்பட்டது. சிறந்த நடிகர் விருதுக்கு, பிரபல ஹீரோ மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நிபா வைரஸ்

நிபா வைரஸ்

காலித் ரகுமான் இயக்கிய 'உண்டா' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஈஸ்வரி ராவ், ரஞ்சித், திலீஷ் போத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியதை மையமாக வைத்து உருவான 'வைரஸ்' படத்தை இயக்கிய ஆஷிக் அபு, சிறந்த இயக்குனர் விருதுக்குத் தேர்வாகியுள்ளார்.

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்

இந்தப் படத்தில் குஞ்சாக்கோபோபன், பார்வதி, ரகுமான் ஆஷிக் அலி உட்பட பலர் நடித்திந்தனர். தமிழில், தியாகராஜன் குமாரராஜா இயக்கிய சூப்பர் டீலக்ஸ், சிறந்த படமாகத் தேர்வாகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி உட்பட பலர் நடித்திருந்தனர். இதில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதி சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த இயக்குனர்

சிறந்த இயக்குனர்

தமிழில் சிறந்த நடிகையாக, அமலா பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'ஆடை' படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராஜன் குமாரராஜா சிறந்த இயக்குனராகவும் சிறந்த ஸ்கிரிப்ட் டைரட்டர்களாக, சூப்பர் டீலக்ஸ் படத்தில் பணியாற்றிய நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன் கே சேகர் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X