twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவாஜி பேரனுக்கு எம்ஜிஆர் விருது!

    By Shankar
    |

    சிவாஜி பேரன் விக்ரம் பிரபுவுக்கு எம்ஜிஆர் விருது வழங்கப்பட்டது.

    எம்.ஜி.ஆர், சிவாஜி அகாடமியின் சினிமா விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது.

    சினிமா துறையைச் சேர்ந்த பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் விக்ரம் பிரபுவுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. கும்கி, இவன்வேறமாதிரி, அரிமாநம்பி, சிகரம்தொடு, வெள்ளக்கார துரை மற்றும் இது என்ன மாயம் ஆகிய எல்லாப் படங்களிலும் படத்துக்குப் படம் மாறுபட்ட வேடங்களில் நடித்து வரவேற்புப் பெற்றதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

    MGR award to Sivaji's grand son

    சிவாஜியின் பேரனான விக்ரம் பிரபுவுக்கு எம்.ஜி.ஆர் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து விக்ரம் பிரபு கூறுகையில், "இந்த எம்,ஜி.ஆர்.விருதை பெறுவதில் மிகவும் பெருமையடைகிறேன். எனது தாத்தாவும், எம்.ஜி.ஆரும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

    ஒரு முறை என தந்தையே கூறியுள்ளார். அவரது படங்களைப் பார்த்து விட்டு எம்.ஜி.ஆர். எப்படியெல்லாம் பாராட்டுவார் என்று.

    எங்களது குடும்பம் எம்.ஜி.ஆருடன் பரஸ்பரம் அன்பு, பாசத்தைப் பகிர்ந்து கொண்டவர்கள் என்ற நிலையில் எனக்கு இந்த விருது மகிழ்ச்சியை அளிக்கிறது," என்றார்.

    இந்த எம்ஜிஆர் - சிவாஜி விருது ஆண்டுதோறும் ஜனவரி முதல் நாளன்று மாலை வி4 எண்டர்டெயின்மென்ட் அமைப்பால் வழங்கப்பட்டு வருகிறது.

    English summary
    The annual V4 entertainment award ceremony was held at Kamaraj arangam on Jan 1st and the MGR award was handed over to Vikram Prabhu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X