twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆர்கோ படத்துக்கு ஆஸ்கர் விருதினை வெள்ளை மாளிகையிலிருந்து அறிவித்த மிஷல் ஒபாமா!

    By Shankar
    |

    Michelle Obama awards top Oscar to 'Argo'
    வாஷிங்டன்: ஆர்கோ படத்துக்கு ஆஸ்கர் விருதினை வெள்ளை மாளிகையிலிருந்து அறிவித்தார் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல்.

    85 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. இந்த முறை ஸ்டீபன் ஸ்பீல்பெர்கின் லிங்கன் மற்றும் ஆங்லீயின் லைப் ஆப் பை ஆகிய இரு திரைப்படங்களும் முறையே 12 மற்றும் 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

    ஆனால் விழாவில் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதினை வென்றது ஆர்கோ படம்.

    விழாவைப் பார்த்தவர்களுக்கு இனிய அதிர்ச்சி தரும் வகையில், இந்த விருதுக்கான நாமினேஷன் மற்றும் இறுதி முடிவை வெள்ளை மாளிகையிலிருந்து அறிவித்தார் அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல்.

    விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்த ஒன்பது படங்களை முதலில் அறிவித்தார் மிஷல். எப்படியும் லிங்கன் படத்துக்குத்தான் இந்த விருது கிடைக்கும் என எதிர்ப்பார்த்த நேரத்தில், ஆர்கோ படம் அந்த விருதைத் தட்டிச் செல்வதாக மிஷல் அறிவித்தபோது ஏக கரகோஷம்.

    தனது பேச்சினேபோது 'இந்தப் பணி மிகவும் முக்கியமானது. எனக்கு பெருமை தருவதும் கூட. இங்கு அறிவிக்கப்பட்ட அனைத்துப் படங்களுமே சிறந்தவை. நம்மை சிரிக்க வைத்தவை, அழ வைத்தவை, இனிய நினைவுகளுக்குத் திரும்ப வைத்தவை,' என்றார் மிஷல்.

    English summary
    First lady Michelle Obama announced the best picture category live from the White House at Sunday’s Academy Awards, crowning “Argo” as the best picture.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X