3 விருதுகளை வென்றது மூத்தோன் .. நிவின்பாலிக்கு உலகஅரங்கில் கிடைத்த பெரிய அங்கீகாரம் !

கொச்சி : எதார்த்தம் நிறைந்த கதைகளையும், தரமான படைப்புகளையும் தொடர்ந்து கொடுத்து வரும் மலையாள திரையுலகம் இன்றுவரை பல்வேறு சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வருகிறது.

அவ்வாறு வெளியாகும் பல தரமான திரைப்படங்கள் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது.

இவ்வாறு தனிச் சிறப்பை பெற்ற மலையாள திரையுலகில் சமீபத்தில் நிவின்பாலியின் மிரட்டும் நடிப்பில் வெளியான மூத்தோன் திரைப்படம் சென்ற ஆண்டு இறுதியில் வெளியாகி இந்திய அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்ற நிலையில் தற்பொழுது உலக அளவில் மூன்று விருதுகளை வென்று தலை நிமிர்ந்து நிற்கிறது.

சாக்லேட் பாய் இமேஜை

சாக்லேட் பாய் இமேஜை

பெண்களின் கனவுக் கண்ணனாக வலம்வந்த நிவின்பாலி சமீப வருடங்களாக தனது சாக்லேட் பாய் இமேஜை மாற்றி பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவ்வாறு நிவின் பாலியின் மிரட்டலான நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான மூத்தோன் திரைப்படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு மொழி ரசிகர்களையும் கவர்ந்து இந்திய அளவில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றது.

மிகப்பெரிய அங்கீகாரம்

மிகப்பெரிய அங்கீகாரம்

நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியிருந்த இந்த திரைப்படம் சமீபத்தில் நியூயார்க் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் விழாவில் திரையிடப்பட்டு உலக அரங்கில் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

தலைநிமிர செய்துள்ளது

தலைநிமிர செய்துள்ளது

இந்த திரைப்படம் ஏற்கனவே இந்தியாவில் பல விருதுகளையும் பாராட்டுகளையும் வென்று தனிச்சிறப்பு பெற்று வந்த நிலையில், தற்பொழுது நியூயார்க் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் மூன்று விருதுகளை வென்று இந்தியாவின் பெருமையை மீண்டும் தலைநிமிர செய்துள்ளது.

முதல் விருது இதுவே

முதல் விருது இதுவே

சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த குழந்தை நட்சத்திரம் என ஒரே திரைப்படத்தில் 3 விருதுகளை வாரி குவித்துள்ள இந்த திரைப்படம் தற்பொழுது இந்திய அளவில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்தத் திரைப்படத்திற்காக நிவின்பாலி சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ள நிலையில், இவர் இதற்கு முன் இந்தியாவில் பல்வேறு விருதுகளை பெற்றிருந்தாலும் சர்வதேச அளவில் நிவின் பாலி பெற்ற முதல் விருது இதுவேயாகும்.

தன் மீது நம்பிக்கை வைத்து

தன் மீது நம்பிக்கை வைத்து

இவ்வாறு சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற நிவின் பாலி அதற்காக நன்றி சொல்லும் விதமாக, நியூயார்க் இந்தியன் பிலிம் பெஸ்டிவல் திரைப்பட விழாவின் தேர்வு குழுவில் இருந்த நடுவர்களுக்கும், தன் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனர் கீது மோகன்தாஸ்க்கும் நன்றி என கூறியிருந்தார். மேலும் மூத்தோன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சஞ்சனா திபு சிறந்த குழந்தை நட்சத்திரம் விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் பலரும் வாழ்த்து

பிரபலங்கள் பலரும் வாழ்த்து

இவ்வாறு உலக அரங்கில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுள்ள மூத்தோன் திரைப்படத்தை நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார் இவர் தமிழில் நள தமயந்தி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்தோன் திரைப்படம் சர்வதேச அளவில் மூன்று விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததைத் தொடர்ந்து இப்படக்குழுவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X