கிராமி விருது விழா 2022... மகனுடன் பங்கேற்ற இசைப்புயல்... வைரலாகும் புகைப்படங்கள்!

லாஸ் வேகாஸ் : சர்வதேச அளவில் இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் என கவனம் பெறும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதை நமது இசைப்புயல் ஏஆர் ரஹ்மானும் வாங்கியுள்ளார். இந்த ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

 கிராமி விருதுகள்

கிராமி விருதுகள்

கிராமி விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இசைக் கலைஞர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விருதும் இசைக்கலைஞர்களுக்கு மிகச்சிறந்த கௌரவத்தை அளித்து வருகிறது. கடந்த ஆண்டில் 84 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

 கிராமி விருதுகள் 2022

கிராமி விருதுகள் 2022

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா நேற்றைய தினம் லாஸ் வேகாசில் நடைபெற்றது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் மேலும் சில பிரிவுகளில் கிராமி விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. இசை ஆல்பங்கள் உள்ளிட்டவையும் இந்த ஆண்டில் அதிகமாக கவனம் பெற்றுள்ளன.

விழாவில் பங்கேற்ற இசைப்புயல்

விழாவில் பங்கேற்ற இசைப்புயல்

இந்நிலையில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்துக் கொண்டுள்ளார். அவர் தனது மகன் அமீன் ரஹ்மானுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் தனது மகனுடன் செல்பி எடுத்து அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஏஆர் ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.

கிராமி விழாவில் மகனுடன் பங்கேற்பு

கிராமி விழாவில் மகனுடன் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் சிறப்பான கோட் சூட்டுடன் அவர் கலந்து கொண்டார். அவரது மகன் அமீனின் உடையும் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் வெளியிட்ட முதல் புகைப்படத்தில் தன்னுடைய மகனுடன் சிரித்தபடி காணப்பட்டார் இசைப்புயல். மேலும் கிராமிஸ் என்று அவர் கேப்ஷனும் வெளியிட்டிருந்தார். சிறப்பான எமோஜியையும் சேர்த்திருந்தார்.

அடுத்தடுத்த செல்ஃபி

அடுத்தடுத்த செல்ஃபி

அடுத்ததாக விழா நடைபெறும் இடத்தில் தனது நண்பர்களுடன் செல்பியை பதிவிட்டுள்ளார். தொடர்ந்து மூன்றாவது செல்பியை மீண்டும் மகனுடன் இணைந்து அவர் பகிர்ந்துள்ளார். முன்னதாக ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக அவர் இரண்டு கிராமி விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X