நடிகை சச்சுவுக்கு 'நாடக சூடாமணி' விருது!

திரைப்படங்களிலும், நாடக உலகிலும் அவர் செய்த சேவையை பாராட்டி இந்த விருதினை சென்னையில் உள்ள ஸ்ரீகிருஷ்ணகான சபா அவருக்கு வழங்கியது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வணயத் தலைவர் ஆர்.நாடராஜ் விருதினை வழங்க, சச்சு நேரில் பெற்றுக் கொண்டார். தொழிலதிபர் நல்லி குப்புசாமி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சச்சுவை வாழ்த்தினார்.
விழாவில் தமிழக அரசு முதன்மைச் செயலாளர் கா.அலாவுதின் ஐ.ஏ.எஸ், ஏவி.எம்.சரவணன், வைஜெயந்திமாலா, ஏ.ஆர்.சீனிவாசன், சித்ராலயா கோபு,எஸ்.பி.முத்துராமன், இசையமைப்பாளர் தேவா, ஒளிப்பதிவாளர் பாபு, எஸ்.வி.ரமணன், இயக்குனர் சி.வி.ராஜேந்திரன், நடிகர் பாண்டு, பாடகி பி.சுசிலா, மூத்த நடிகைகள் ராஜசுலோசனா, காஞ்சனா, ராஜஸ்ரீ மற்றும் ஏராளமான பிரமுகர்களும் ரசிகர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
Comments


Click it and Unblock the Notifications