twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த இயக்குநர் பாலா - நான் கடவுளுக்கு 2 விருது

    By Staff
    |

    Bala in Naan Kadavul
    டெல்லி: நான் கடவுள் படத்துக்காக சிறந்த தேசிய இயக்குநருக்கான விருது பாலாவுக்குக் கிடைத்துள்ளது. நான் கடவுள் படம் மொத்தம் 2 விருதுகளைத் தட்டியுள்ளது. தமிழுக்கு மொத்தம் 3 விருதுகள் கிடைத்துள்ளன.

    2008ம் ஆண்டுக்கான 56வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி டெல்லியில் இன்று அறிவித்தார்.

    விருதுகள் பெற்ற படங்கள், கலைஞர்கள் - முழு விவரம்

    தேசியஅளவில் சிறந்த இயக்குநராக பாலா அறிவிக்கப்பட்டுள்ளார். நான் கடவுள் படத்துக்காக இந்த விருது கிடைத்துள்ளது.

    சிறந்த மேக்கப் கலைஞருக்கான விருது மூர்த்திக்குக் கிடைத்துள்ளது. இதுவும் நான் கடவுள் படத்துக்காக திடைத்து்ளது.

    சிறந்த தமிழ்ப் படமாக கெளதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் தேர்வாகியுள்ளது.

    சிறந்த நடிகராக ஜோகுவா என்ற மராத்திப் படத்தில் நடித்த உபேந்திரா லிமாயியும், சிறந்த நடிகையாக பேஷன் படத்தில் நடித்ததற்காக பிரியங்கா சோப்ராவும் தேர்வாகியுள்ளனர்.

    தேசிய அளவில் சிறந்த படமாக அந்தாஹீன் (பெங்காலி)தேர்வாகியுள்ளது.

    இதே படம் ஒளிப்பதிவு, சிறந்த பாடல்கள், சிறந்த பின்னணிப் பாடகி ஆகிய விருதுகளையும் அள்ளியுள்ளது.

    சிறந்த பாப்புலர் படமாக ஓயே லக்கி லக்கி ஓயே (இந்தி) தேர்வாகியுள்ளது.

    சிறந்த துணை நடிகராக அர்ஜூன் ராம் பால் (ராக் ஆன்), சிறந்த துணை நடிகையாக கங்கணா ரனவத் (பேஷன்) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    சிறந்த பாடகருக்கான விருது ஜோக்வா (மராத்தி) படத்துக்காக ஹரிகரனுக்கும், சிறந்த பாடகிக்கான விருது ஷ்ரேயா கோசலுக்கும் (அந்தாஹீன், ஜோக்வா) கிடைத்துள்ளது.

    சிறந்த இசையமைப்புக்கான விருதையும் ஜோக்வா படம் வென்றுள்ளது.

    சிறந்த எடிட்டிங், கலை இயக்கம்- பிராக் (இந்தி), சிறந்த குடும்ப மதிப்பீடுகள் பிரிவில் சிறந்த படத்துக்கான விருதினை லிட்டில் சிஜோ (ஆங்கிலம்) பெற்றுள்ளது.

    சிறந்த குழந்தைகளுக்கான திரைப்படத்துக்கான விருது கன்னடப் படமான குப்பஜ்ஜிகலு பெற்றுள்ளது.

    சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது மாஸ்டர் ஷாம்ஸ் படேல் (தேங்க்ஸ் மா - இந்தி) பெற்றார்.

    சிறப்பு நடுவர் விருதினை மலையாளப் படமான பயாஸ்கோப் பெற்றுள்ளது.

    சிறந்த ஆடை வடிவமைப்பாளராக நீதா லல்லா (ஜோதா அக்பர்), சிறந்த நடன வடிவமைப்பாளருக்கான விருதையும் ஜோதா அக்பர் பெற்றது.

    மலையாளத்தில் சிறந்த படமாக திரக்கதா, கன்னடத்தில் விமுக்தி, தெலுங்கில் 1940 லூகாகிராமம் ஆகியவை பெற்றுள்ளன.

    பொழுதுபோக்குப் பிரிவில் சிறந்த படங்கள், கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைக்கப்பட்ட குழுவுக்கு கேரளாவைச் சேர்ந்த ஷாஜி கருண் தலைமை தாங்கினார். இந்தக் குழுவில் நடிகை நக்மா உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    மொத்தம் 126 திரைப்படங்கள் போட்டி போட்டன.

    பொழுது போக்கு அல்லாத பிரிவு...

    பொழுதுபோக்கு அல்லாத பிரிவில் சிறந்த படமாக ஏஎப்எஸ்பிஏ 1958 தேர்ந்தெடுக்கப்பட்டது.

    சிறந்த இயக்குநராக வினூ சோலிபரம்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பிலிம்ஸ் டிவிஷன் தயாரித்த 'The Assassination of Rajiv Gandhi - A Reconstruction" படம் சிறந்த வரலாற்றுச் சம்பவத் தொகுப்புக்கான விருதைப் பெற்றது.

    வருகிற மார்ச் மாதம் டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் விருதுகளை வழங்குவார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X