twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவ்வளவு கேவலமாவா போய்ருச்சு தமிழ் சினிமாப் படங்கள்!

    |

    சென்னை: கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் தமிழ் படங்களுக்கு ஒரு பிரிவில் கூட விருது கிடைக்கவில்லை.

    கடந்த ஆண்டு வெளியான பேரன்பு பரியேறும் பெருமாள், வட சென்னை, 96, ராட்சசன் உள்ளிட்ட படங்கள் சர்வதேச விழாக்களில் விருதுகள் பெற்ற நிலையில் ஒரு படத்திற்கு கூட தேசிய விருது கிடைக்காதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இது குறித்து பலரும் வெளிப்படையாகவே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

    Nationa awards issue go big

    விமல் - வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கன்னிராசி' படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசியபாடலாசிரியர் யுகபாரதி, தமிழில் தரமான படங்கள் எடுக்கப்பட்டும் தேசிய விருதுகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.

    Nationa awards issue go big

    ஐங்கரன் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, தரமான படைப்புகளும், கலைஞர்களும் உள்ள போதிலும், உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்தார். தேர்வுக்குழுவால் சிறந்த தமிழ் படங்கள் புறக்கணிக்கப்படுவதால் இக்குழுவில் தமிழர்கள் இடம்பெற வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

    Nationa awards issue go big

    நடிகர் ரஜினிகாந்த், தமிழ் திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டாதது கட்டாயம் ஏமாற்றம் அளிக்கிறது. இதுதொடர்பாக தேர்வுக்குழுதான் பதிலளிக்க வேண்டும் என்றார்.

    Nationa awards issue go big

    இதில் எங்கே தவறு நடந்தது என்பதை கலந்தாலோசித்து திரையுலக முன்னோடிகள்தான் முடிவெடுக்க வேண்டும். மேலும் நல்ல தரமான தமிழ் படங்ககளை திட்டமிட்டு ஜூரிகள் புறக்கணித்துள்ளனரா என்ற கேள்வியும் தமிழ்த் திரையுலகில் எழுந்துள்ளது.

    English summary
    The issue of National Awards are becoming a big issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X