தேசிய விருதுகள் அறிவிப்பு.... ஜோக்கர், 24 படங்களுக்கு விருது!
2016-ம் ஆண்டு படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
தமிழில் சிறந்த படமாக ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படம் தேர்வாகியுள்ளது.
ட்ரீம் வாரியர் புரொடக்ஷன் சார்பில் எஸ்ஆர் பிரபு தயாரித்த படம் இது. குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் வணிக ரீதியாகவும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இப்போது தமிழின் சிறந்த படமாக விருது பெற்றுள்ளது. படத்தை இயக்கிய ராஜு முருகன் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர்.
அதேபோல, தமிழில் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது சூர்யா நடித்த 24 படத்துக்குக் கிடைத்துள்ளது. சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதும் (திரு) இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.
24 படத்தை விக்ரம் குமார் இயக்கியிருந்தார். சூர்யாவே தயாரித்திருந்தார்.
பாடலாசிரியர் வைரமுத்து ஏழாவது முறையாக சிறந்த பாடலாசியருக்கான விருதினை இந்த ஆண்டு பெற்றுள்ளார்.
சிறந்த திரைப்பட எழுத்தாளருக்கான விருது தனஞ்செயனுக்கும், சிறந்த நடன இயக்குநருக்கான விருது ராஜு சுந்தரத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











