Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
National Film Awards 2022 Live: 68வது தேசிய திரைப்பட விருதுகள் - சூர்யா, ஜோதிகாவுக்கு விருது!
சென்னை: 68வது தேசிய விருது வழங்கும் விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாக 2020ம் ஆண்டுக்கு வழங்க வேண்டிய படங்களுக்காக தற்போது இந்த தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழில் நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று ஒட்டுமொத்தமாக 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது. மண்டேலா திரைப்படம் 2 விருதுகளையும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் 3 தேசிய விருதுகள் என மொத்தமாக 10 தேசிய விருதுகளை தமிழ் சினிமா அள்ளி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சற்றுநேரத்தில் 68வது தேசிய விருது வழங்கும் விழா… குடும்பத்துடன் டெல்லி சென்ற சூர்யா
தேசிய விருது பெற்றார் இயக்குநர் சுதா கொங்கரா
சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை இயக்கி ஒட்டுமொத்த உலகத்தையே வியப்பில் ஆழ்த்திய இயக்குநர் சுதா கொங்கராவுக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு தேசிய விருது!
சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த வசனகர்த்தா என இரு தேசிய விருதுகளை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் பெற்றுள்ளார்.
தேசிய விருது பெற்றார் நடிகை அபர்ணா பாலமுரளி
சூரரைப் போற்று படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்ட நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
ஜோதிகாவுக்கு தேசிய விருது
சூரரைப் போற்று படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த நிலையில், சிறந்த படத்திற்கான தேசிய விருதை அதன் தயாரிப்பாளரான நடிகை ஜோதிகா பெற்றுள்ளார்.
தேசிய விருது பெற்றார் சூர்யா
சூரரைப் போற்று படத்தில் மாறா எனும் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு குடியரசு கைகளால் தேசிய விருது வழங்கப்பட்டது.
நஞ்சம்மாவுக்கு தேசிய விருது
அய்யப்பனும் கோஷியும் படத்தில் ’'களக்காத்த '' பாடலை பாடியதற்காக நாட்டுப்புற பாடகி நஞ்சம்மாவுக்கு சிறந்த பாடகிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இயக்குநர் வசந்த்துக்கு தேசிய விருது
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தை இயக்கிய இயக்குநர் வசந்த் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றார்.
தேசிய விருது பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்
சூரரைப் போற்று படத்துக்கு சிறந்த பின்னணி இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் குமார் குடியரசுத் தலைவர் கைகளால் தேசிய விருதை பெற்றார்.
@gvprakash brother ♥️
— Navaneethan Naveen ♥️ (@Navaneethan1740) September 30, 2022
Finnally 🔥#NationalFilmAwards pic.twitter.com/Ugz59MQaOX
68வது தேசிய திரைப்பட விருது
68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சூர்யா,ஜோதிகா சற்று நேரத்தில் தேசிய விருதை பெறுகிறார் நடிகர் சூர்யா
#SURIYA PRIDE OF INDIAN CINEMA🔥♥️#SuriyaTriumphsAtNationals 😎 pic.twitter.com/0x2JHhRVKc
— Saloon Kada Shanmugam (@saloon_kada) September 30, 2022
68வது தேசிய திரைப்பட விருது
சிறந்த குழந்தை நட்சத்திரம் வருண் புத்ததேவ் டூல்சிதாஸ் ஜூனியர் படத்திற்காக தேசிய திரைப்பட விருதை வென்றார்
Child Actor Varun Buddhadev receives the #NationalFilmAwards for the film Toolsidas Junior under the Feature Films category. @AshGowariker @duttsanjay pic.twitter.com/dEsHod0bKq
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) September 30, 2022
வேட்டி சட்டையில் மாஸ் காட்டிய ஜி.வி. பிரகாஷ் குமார்
சூரரைப் போற்று படத்திற்கு தரமான இசையை கொடுத்த ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது வழங்கும் விழாவுக்கு வேட்டி, சட்டை அணிந்து செம கெத்தாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
68வது தேசிய திரைப்பட விருது
சிறந்த புலனாய்வுத் திரைப்படம் தி சேவியர் (பஞ்சாபி) பிரிகேடியர் பிரீதம் சிங் விருதை வென்றார்
Brigadier Pritam Singh receives Best Investigate Film award for 'The Saviour' at 68th #NationalFilmAwards.@rashtrapatibhvn pic.twitter.com/zHtlaJcHQC
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) September 30, 2022
68வது தேசிய திரைப்பட விருது
'தி லாங்கஸ்ட் கிஸ்' திரைப்படத்திற்கான சிறந்த சினிமா புத்தகத்திற்கான விருதை எழுத்தாளர் கிஷ்வர் தேசாய் வென்றார்
Author Kishwar Desai wins best book on cinema award for 'The Longest Kiss' at 68th #NationalFilmAwards. pic.twitter.com/eccm0Me6PG
— Prasar Bharati News Services & Digital Platform (@PBNS_India) September 30, 2022
68வது தேசிய திரைப்பட விருது
சிறந்த இசை இயக்கம் விஷால் பரத்வாஜ் 1232 கிமீ என்ற ஆவணப்படத்தில் மாரெங்கே தோ வாஹின் ஜா கர் பாடலுக்காக சிறந்த இசை இயக்குனருக்கான தேசிய விருதைப் பெற்றார்
குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட சூர்யா
2டி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட சூரரைப் போற்று திரைப்படம் அதிகப்படியாக 5 தேசிய விருதுகளை பெற உள்ள நிலையில், மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் வீடியோவை 2டி நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
At New Delhi 📍
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) September 30, 2022
Team #SooraraiPottru is all set for the 68th National Awards Ceremony!
@Suriya_offl #Jyotika @sudha_kongara @gvprakash @rajsekarpandian @aparnabala2 @jacki_art #ShaliniUshaNair @nikethbommi @editorsuriya @PoornimaRamasw1 @PrimeVideoIN @SonyMusicSouth pic.twitter.com/E49s8dXXSE