ஜீ தமிழ் சினி அவார்ட்ஸ்.. தலைவி நயன்தாராவுக்கு இரண்டு அவார்டு.. ஆனா இங்கேயும் அவர் மிஸ்சிங்!
சென்னை: ஜீ தமிழ் சினி அவார்ட்ஸ் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
2020ம் ஆண்டு பிறந்த உடனே இப்படியொரு திரைப்பிரபலங்கள் பங்குபெறும் மிக பிரம்மாண்டமான விருது விழா நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு பயங்கர ட்ரீட்டாக இருந்தது.
இந்த விருது விழாவில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டன.
பிரவுன் சாரி
2020 ஆரம்பத்திலேயே தலைவி நயன்தாரா தரிசனம் நேற்று தமிழ் ரசிகர்களுக்கு கிடைத்தது. பிரவுன் சாரியில் செம அழகா கெத்தா நயன் என்ட்ரி கொடுத்ததில் இருந்தே ரசிகர்கள் ஆராவாரம் அதிகரித்தது.
விஸ்வாசம், பிகில்
2019ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. விஸ்வாசம் மற்றும் பிகில் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை கடந்த ஆண்டு வெளிப்படுத்தியதற்காக இந்த விருது கொடுக்கப்பட்டது.
இரண்டாவது அவார்டு
தயாரிப்பாளர் போனி கபூர் நடிகை நயன்தாராவுக்கு இன்னொரு விருதை வழங்கினார். மறைந்த நடிகை ஸ்ரீதேவி நினைவாக இந்திய சினிமாவில் கவனம் ஈர்க்கும் பெண் என்ற விருதினையும் நயன் பெற்றுக் கொண்டார்.
சோஷியல் மீடியாவில் இல்லை
விருது பெற்ற நடிகை நயன்தாரா, தான் எந்த ஒரு சோஷியல் மீடியாவிலும் இல்லை என்றும், தனது பெயரில் நிறைய ஃபேக் ஐடிக்கள் வலம் வருவதாகவும் கூறினார். சோஷியல் மீடியாவில் அதிகளவில் நெகட்டிவிட்டி பரவி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆன்மிக பாதை
அடிக்கடி கோயில் கோயிலாக உங்களை பார்க்க முடிகிறதே என தொகுப்பாளர்கள் கேட்க மன நிம்மதிக்காக கோயில்களுக்கு செல்கிறேன் என நயன் கூறியுள்ளார்.

விக்கி மிஸ்சிங்
நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படம் ஒன்று அண்மையில் கசிந்து வைரலானது. அந்த புகைப்படத்தில் காதலர் விக்னேஷ் சிவன் இல்லை. அதேபோல, நேற்றைய விழாவிலும் விக்னேஷ் சிவன் பங்கேற்கவில்லை.

நிம்மதியா இருக்கேன்
அன்பாகவும் அமைதியாகவும் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று அட்வைஸ் பண்ண நயன்தாராவிடம் தொகுப்பாளர்கள் மறைமுகமாக விக்னேஷ் சிவன் குறித்து கேட்டதற்கு, எந்தவொரு பதிலும் கூறாமல், தான் தற்போது தான் நிம்மதியாக இருப்பதாக பதிலளித்தார்.


Click it and Unblock the Notifications











