அன்னபூரணி படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை வென்ற நயன்தாரா.. முத்த மழை பொழிந்த விக்னேஷ் சிவன்!
துபாய்: சைமா விருது விழா, ஐஃபா விருது விழா என அடுத்தடுத்து சினிமா பிரபலங்கள் துபாயிலேயே டென்ட் அடித்து வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான படங்களுக்கான விருது விழா நேற்று நடைபெற்றது. இந்த சைமா விருது விழாவில் சிறந்த தமிழ் நடிகைக்கான விருதினை நடிகை நயன்தாரா வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற படங்களுக்கு விருதுகள் சைமா 2024 விருது விழாவில் வழங்கப்பட்டன. இதற்காக ஏகப்பட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் துபாய்க்கு பறந்து சென்றனர்.

தெலுங்கில் நானியின் தசரா திரைப்படம் நிறைய விருதுகளை அள்ளிய நிலையில், தமிழில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் அதிகப்படியாக 5 விருதுகளை பெற்றன.
சிறந்த நடிகை நயன்தாரா: சித்தா, மாவீரன், ஜெயிலர், பொன்னியின் செல்வன், லியோ உள்ளிட்ட பல படங்கள் போட்டியில் இருந்த நிலையில், சைமா விருது விழாவில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பிரிவில் விருதுகளை பெற்றுள்ளன. நடிகை த்ரிஷா அல்லது சித்தா பட நடிகை நிமிஷா சஜயனுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவுட் ஆஃப் தி பாக்ஸாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருதை அன்னபூரணி படத்துக்காக பெற்றுள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய அன்னபூரணி: ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா இயக்குநராக அறிமுகமாகி கடந்த ஆண்டு நயன்தாரா, சத்யராஜ், கார்த்திக் குமார் நடிப்பில் அன்னபூரணி படத்தை இயக்கினார். அந்த படத்தில் நயன்தாரா சமையல் கலைஞராக நடித்திருந்தார். தியேட்டரில் வெளியான அந்த படத்துக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், வட இந்தியாவில் ராமர் குறித்து தவறாக படம் சித்தரித்து இருப்பதாக சர்ச்சைகள் வெடித்தன. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்தும் அந்த படம் நீக்கப்பட்டது. ஏகப்பட்ட தடைகளையும் விமர்சனங்களையும் சந்தித்த அன்னபூரணி படத்தில் நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
சந்தோஷத்தில் கணவர் முத்த மழை: அன்னபூரணி படத்துக்காக நடிகை நயன்தாரா ஜெய் ஸ்ரீராம் என்று போட்டு மன்னிப்பு கடிதம் எல்லாம் வெளியிட்டு இருந்தார். ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்த அவருக்கு இந்த விருது மிகப்பெரிய அங்கீகாரமாக உள்ளதாக நினைத்த விக்னேஷ் சிவன் மேடையிலேயே தனது மனைவி நயன்தாராவுக்கு முத்த மழை பொழிந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

துபாயில் நயன்தாரா: சைமா விருது விழா 2024ல் பங்கேற்கத்தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளனர். சமீபத்தில், தனது மகன்களின் புகைப்படங்களை துபாயில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் டெஸ்ட், மண்ணாங்கட்டி படங்கள் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன. நிவின் பாலியுடன் மலையாளத்தில் ஒரு படம் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் என நயன்தாரா கைவசம் நிறைய படங்கள் உள்ளன.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில்: பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, கெளரி கிஷன் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் அந்த படமும் திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications











