Neeya Naana: நீயா நானா கோபிநாத்தை பாராட்டிய வெற்றிமாறன்.. மாரி செல்வராஜ் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: விஜய் டிவியில் கடந்த 2006ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தி வருகிறார். மக்களின் குரலாக ஒலிக்கும் இந்த நிகழ்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஆண்டுதோறும் விருது விழா நிகழ்ச்சியாக மாறி வருகிறது. சமூக சிந்தனை கருத்துக்களை கொண்டவர்களை அழைத்து அவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி வருகின்றனர்.

நீயா நானா நிகழ்ச்சிக்கென தனி இயக்குநர் மற்றும் ஒரு குழுவே இருந்தாலும் மக்களுக்கு பிரதானமாக தெரிவது கோட் போட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தும் கோபிநாத் தான். அவர் கோட் போடுவதை வைத்தே ஏகப்பட்ட மீம்கள் வந்தாலும் தொடர்ந்து கோட் அணிந்தும் சில நாட்களில் மற்ற உடைகளை அணிந்தும் நிகழ்ச்சியை தொடர்ந்து அதே கம்பீரத்துடனும் உற்சாகத்துடனும் தொகுத்து வழங்கி வருகிறார்.

Neeya Naana Awards 2023: Vetri Maaran and Mari Selvaraj talks about Gobinath

நீயா நானா விருதுகள் 2023: வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு விஜய் டிவியில் நீயா நானா விருதுகள் 2023 நிகழ்ச்சி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு மாமன்னன் மற்றும் விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கிய வெற்றிமாறன் மற்றும் மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குநர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து அவர்களுக்கு விருது கொடுத்தும் நிகழ்ச்சியில் கெளரவப்படுத்தி உள்ளனர். சமீபத்தில் அதன் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதன் புரமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

Neeya Naana Awards 2023: Vetri Maaran and Mari Selvaraj talks about Gobinath

வெற்றிமாறன் பாராட்டு: ரொம்ப சீரியசான விஷயங்களையும் பேசுறீங்க அதே போல மக்கள் அன்றாடம் சந்திக்கக் கூடிய உணர்வுபூர்வமான பிரச்சனைகள் பற்றியும் பேசுறீங்க பார்க்கவே ரொம்ப நல்லா இருக்கு என நீயா நானா நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வரும் கோபிநாத்தை இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டி பேசியுள்ள புரமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

Neeya Naana Awards 2023: Vetri Maaran and Mari Selvaraj talks about Gobinath

அப்பா பற்றி பேசிய மாரி செல்வராஜ்: இயக்குநர் ஆன பின்னர் அப்பாவை எங்க தூக்கிப் போய் கம்பீரமா உட்கார வச்சீங்க என மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜிடம் கோபிநாத் கேள்வி எழுப்ப, முதல்ல எல்லாம் சாமி ஆடும் போது ஒரு பதட்டத்துடன் ஆடுவார். ஆனால், இப்போ கெத்தா கம்பீரமா ஆடுறாரு என்றார்.

மாரிக்கிட்ட இதுதான் புடிச்சிருக்கு: சமூகத்தில் என்ன தாக்கத்தை உருவாக்குதோ அதை விவாதப்பொருளாக மாற்றக் கூடிய மனிதர் மாரி செல்வராஜ். அவருடைய குவாலிட்டியாகவே அதைத்தான் பார்க்கிறேன் என வெற்றிமாறன் நீயா நானா விருது விழாவில் பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X