6 விருதுகளை தட்டித்தூக்கிய ஒன் இந்தியா.. கவனத்தை ஈர்த்த ‘சினிமாக்காக ஆக்டிங் கிளாஸ்’ வீடியோ!

டெல்லி: e4m DO GOOD Awards 2025 டெல்லியில் மே 13ம் தேதி நடைபெற்றது. தொழில் நிறுவனங்களுக்கான விருது வழங்கும் விழாவில் ஒன் இந்தியா செய்தி நிறுவனம் 6 விருதுகளை அள்ளி அசத்தியுள்ளது. மக்களுக்கு அன்றாடம் தேவையான அனைத்து விதமான செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் அடங்கிய கட்டுரைகளை ஒன் இந்தியா நிறுவனம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வழங்கி வருகிறது.

செய்திகளை கடந்து விளையாட்டு, சினிமா, பொருளாதாரம், டெக்னாலஜி, லைஃப் ஸ்டைல் என பல்வேறு விஷயங்களையும் தனிக்கவனம் செலுத்தி வழங்கி வருகிறது.

OneIndia won 6 Awards at e4m Do Good Awards Function

இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற e4m DO GOOD Awards 2025 நிகழ்ச்சியில் ஒன் இந்தியா செய்தி நிறுவனத்துக்கு பல்வேறு பிரிவுகளில் 6 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் மகிழ்ச்சியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்.

ஒன் இந்தியா தமிழ் யூடியூப் சேனலில் இடம்பெற்ற "Cinema-காக Acting Class நாங்கதான் ஆரம்பித்தோம்" எனும் வீடியோவுக்கு விருது கிடைத்துள்ளது. சி.எச். ஜெயராவ் நடத்தி வரும் தியேட்டர் லேப் பற்றிய விஷயங்களை பிரத்யேகமாக ஜெயராவிடமே கேட்டு தெரிந்துக் கொண்டு சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு தியேட்டர்கள் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கின்றன.

நடிப்பின் உண்மையான அர்த்தத்தை நடிகர்களுக்கு எந்தளவுக்கு அவை கற்றுக் கொடுக்கின்றன. ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுகளை அள்ளும் நடிகர்கள் எல்லாம் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டுகள் தான் என்றும் இந்தியாவில் தான் இதன் மதிப்பு பலருக்கும் பெரிதாக தெரியவில்லை என அவர் பேசிய விஷயங்கள் அடங்கிய வீடியோவுக்கு விருது கிடைத்துள்ளது.

மேலும், குட் ரிட்டர்ன்ஸ் டிஜிட்டல் இந்தியா, கார்கில் க்ரோனிக்கல்ஸ், சாஹி பக்தே ஹை, சைபர் செக்யூரிட்டி பற்றி விரிவாக பேசிய Scammed மற்றும் ஒன் இந்தியா மலையாளம் வெளியிட்ட இயற்கை பேரிடல் கட்டுரைகள் என மொத்தமாக 6 விருதுகளை பெற்றுள்ளது.

எப்போதுமே வாசகர்களுக்காக பல்சுவை செய்திகளையும் துல்லியமாகவும் துடிப்புடனும் கொடுத்து வரும் ஒன் இந்தியா நிறுவனம் இந்த பெருமை மிகு தருணத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X