Oscars 2024: 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஓபன்ஹெய்மர்.. பயங்கர அடிவாங்கிய பார்பி.. இப்படி ஆகிடுச்சே!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் அதிகபட்சமாக 7 விருதுகளை வென்று கிறிஸ்டோபர் நோலன் தனது திரைப்படத்தின் மூலம் இங்க நான் தான் கிங்கு என நிரூபித்துள்ளார். பாக்ஸ் ஆபிஸில் ஓபன்ஹெய்மர் படத்தை பந்தாடிய பார்பி படம் ஆஸ்கர் விருது விழாவில் ஒரே ஒரு விருது மட்டுமே வென்றது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவிலும் நம்ம இந்தியாவில் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கும் தொடங்கியது. முதலில் நடைபெற்ற ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் பல்வேறு ஹாலிவுட் நடிகைகள் அழகு பதுமைகளாக உடையணிந்துக் கொண்டு விருது விழாவை கண்கவர் நிகழ்ச்சியாக மாற்றினர்.

Oppenheimer won 7 Oscars and Barbie just grab single award at 96th Academy Awards

சிறந்த நடிகர் சிலியன் மர்பி: கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்பி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓபன்ஹெய்மர் திரைப்படம். அணுகுண்டை தயாரித்த ஜே. ராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவானது. ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமா நாகசாகி நகர்களின் மீது அணுகுண்டு போடப்பட்டு பல லட்சம் உயிர்கள் பலியாக தான் காரணமாகி விட்டோம் என வருந்தும் காட்சிகளிலும், இந்த உலகமே அழியப்போகுது என நினைக்கும் காட்சிகளிலும் தனது நடிப்பால் சிலியன் மர்பி அசத்தியிருந்தார். அந்த படத்துக்கு சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறந்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்: இன்செப்ஷன், டெனட் உள்ளிட்ட பல சிறப்பான படங்களை இயக்கி உலகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள கிறிஸ்டோபர் நோலன் முதல் முறையாக சிறந்த இயக்குநர் விருதை ஓபன்ஹெய்மர் படத்துக்காக வென்றுள்ளார்.

Oppenheimer won 7 Oscars and Barbie just grab single award at 96th Academy Awards

மொத்தம் 7 விருதுகள்: சிறந்த இயக்குநருக்கான விருதை கிறிஸ்டோபர் நோலன் வென்றார். சிறந்த படத்துக்கான விருதும் ஓபன்ஹெய்மர் படத்துக்குத்தான் கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை சிலியன் மர்பியும் சிறந்த துணை நடிகருக்கான விருதை ராபர்ட் டவுனி ஜூனியரும் வென்றனர். மேலும், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 7 விருதுகள் ஓபன்ஹெய்மர் படத்துக்கு கிடைத்தது.

பார்பிக்கு ஒரு விருது: 13 பிரிவுகளில் போட்டியிட்ட ஓபன்ஹெய்மர் 7 விருதுகளை வென்ற நிலையில், 8 பிரிவுகளில் போட்டியிட்ட பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற பார்பி திரைப்படம் வெறும் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை மட்டும் வென்றது. 2வதாக அதிக ஆஸ்கர் விருதுகளை புவர் திங்ஸ் படம் தான் தட்டிச் சென்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X