twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லைப் ஆப் பைக்கு 4 ஆஸ்கர்-சிறந்த இயக்குநர் ஆங் லீ, நடிகர் லூயிஸ், நடிகை ஜெனீபர் லாரன்ஸ்

    By Sudha
    |

    லாஸ் ஏஞ்சலெஸ்: ஹாலிவுட் திரையிலகினரால் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த நடிகராக டேணியல் டே லூயிஸ் தேர்வானார். சிறந்த நடிகையாக ஜெனீபர் லாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த இயக்குநராக ஆங் லீ தேர்வானார்.

    ஆங் லீயின் லைப் ஆப் பை படம் அதிகபட்சமாக 4 விருதுகளைத் தட்டிச் சென்றது. இப்படம் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டதாகும்.

    சிறந்த துணை நடிகராக ஜாங்கோ அன்செய்ன்ட் படத்தில் நடித்த கிறிஸ்டோபர் வால்ட்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை நடிகையாக ஆன்னி ஹேதவே தேர்வானார்.

    சிறந்த நடிகர் டேணியல் டே லூயிஸ்

    சிறந்த நடிகர் டேணியல் டே லூயிஸ்

    சிறந்த நடிகருக்கான விருதை லிங்கன் படத்தில் நடித்தவரான டேணியல் டே லூயிஸ் வென்றார். இதுஅவருக்கு கிடைத்துள்ள 3வது சிறந்த நடிகருக்கான விருதாகும். மேலும் இதுவரை அதிக முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற முதல் நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் லூயிஸ்.

    சிறந்த நடிகை ஜெனீபர் லாரன்ஸ்

    சிறந்த நடிகை ஜெனீபர் லாரன்ஸ்

    சில்வர் லைனிங்ஸ் பிளேபுக் படத்தில் நடித்த ஜெனீபர் லாரன்ஸ் சிறந்த நடிகைக்கான விருதைத் தட்டிச் சென்றார். 2வது முறையாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட அவருக்கு கிடைத்துள்ள முதல் விருதாகும் இது.

    ஆங் லீக்கு 2வது விருது

    ஆங் லீக்கு 2வது விருது

    லைப் ஆப் பை இயக்குநர் ஆங் லீ 2வது முறையாக சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார். மேலும் 2வது முறையாக இயக்குநருக்கான விருதுப் போட்டியில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை அவர் வீழ்த்தியுள்ளார்.

    சிறந்த படம் ஆர்கோ

    சிறந்த படம் ஆர்கோ

    சிறந்த திரைப்படத்துக்கான விருதினை ஆர்கோ பெற்றுள்ளது.

    சிறந்த ஒளிப்பதிவு- லைப் ஆப் பை

    சிறந்த ஒளிப்பதிவு- லைப் ஆப் பை

    சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது லைப் ஆப் பை பெற்றது. அதேபோல சிறந்த விஷூவல் எபக்ட்ஸுக்கான விருதையும் லைப் ஆப் பை பெற்றது.

    சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதை பிரேவ் பெற்றது. சிறந்த அனிமேட்டட் குறும்படத்துக்கான விருதை பேப்பர்மேன் பெற்றது.

    லெஸ் மிஸரபிள்ஸ்

    லெஸ் மிஸரபிள்ஸ்

    சிறந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைலுக்கான விருது லெஸ் மிஸரபிள்ஸ் படத்துக்குப் போயுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருதை அன்னா கரேனினா தட்டிச் சென்றது.

    2வது முறையாக விருது வென்ற வால்ட்ஸ்

    2வது முறையாக விருது வென்ற வால்ட்ஸ்

    சிறந்த துணை நடிகருக்கான விருதை 2வது முறையாக வென்றுள்ளார் கிறிஸ்டோபர் வால்ட்ஸ். இவர் இந்த விருதுக்கு இதுவரை 2 முறை மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இரண்டு முறையும் விருதை வென்றுள்ளார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இங்ளோரியஸ் பாஸ்டர்ஸ்ட் படத்துக்காக தனது முதல் ஆஸ்கரை வென்றவர் கிறிஸ்டோபர்.

    ஆன்னி ஹேதவேக்கு முதல் விருது

    ஆன்னி ஹேதவேக்கு முதல் விருது

    சிறந்த துணை நடிகைக்கான விருதினை லெஸ் மிஸரபிள்ஸ் படத்துக்காக ஆன்னி ஹேதவே வென்றார். இவர் ஆஸ்கர் வெல்வது இது முதல் முறையாகும். விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட 2வது முறைதான் அவருக்கு விருது கை கூடியுள்ளது.

    சிறந்த வெளிநாட்டுப் படம்- ஆமர்

    சிறந்த வெளிநாட்டுப் படம்- ஆமர்

    சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - லிங்கன்
    சிறந்த திரைப்பட எடிட்டிங் - ஆர்கோ
    சிறந்த சவுண்ட் எடிட்டிங் - ஜீரோ டார்க் திர்ட்டி மற்றும் ஸ்கைபால்
    சிறந்த சவுண்ட் மிக்ஸிங்- லெஸ் மிஸரபிள்ஸ்
    சிறந்த வெளிநாட்டுப் படம்- ஆமர்
    சிறந்த டாக்குமென்டரி பீச்சர் - சர்ச்சிங் பார் சுகர் மேன்
    சிறந்த டாக்குமென்டரி ஷார்ட் - இனொசென்டே
    சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - கர்ப்யூ.

    சிறந்த ஒரிஜினல் இசை

    சிறந்த ஒரிஜினல் இசை

    ஒரிஜினல் திரைக்கதை - ஜாங்கே அன்செய்ன்ட்
    தழுவிய திரைக்கதை - ஆர்கோ
    சிறந்த ஒரிஜினல் இசை - மைக்கேல் டானா, லைப் ஆப் பை
    சிறந்த ஒரிஜினல் பாடல் - ஸ்கைபால்

    English summary
    Oscar 2013 is out and the Best Supporting Actor Oscar goes to Christoph Waltz for Django Unchained. This is Christoph's second Best Supporting Actor win. He won a couple of years ago for Inglorious Basterds. So he's won both times he's been nominated, which gives him a 100% strike rate.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X