ஆஸ்கர் 2018: சிறந்த நடிகர் கேரி ஓல்ட்மேன்; சிறந்த நடிகை ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட்! #Oscar2018

By Shankar

Recommended Video

90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா!- வீடியோ

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த நடிகர் நடிகைக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டார்க்கஸ்ட் அவர் (Darkest Hour) படத்தில் நடித்த கேரி ஓல்ட் மேனுக்கு சிறந்த நடிகர் விருதும், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசௌரி (Three Billboards Outside Ebbing, Missouri) படத்தில் நடித்த ப்ரான்சிஸ் மெக்டர்மான்டுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர் பிரிவில் கேரி ஓல்ட்மேனுக்கு போட்டியாக டென்சல் வாஷிங்டன், டேனியல் கலுயா, டேனியல் டே லூயிஸ், டிமோதி சாலமெட் உள்ளிட்டோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

அதேபோல சிறந்த நடிகைக்கான பிரிவில் சேல்லி ஹாவ்கின்ஸ், மார்கட் ராப்பி, சாயிர்ஸ் ரோனன் மற்றும் மெரிஸ் ஸ்ட்ரீப் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

Oscar 2018: Best actors Gary Oldman, Frances McDermond

கேரி ஓல்ட் மேன்

59 வயதாகும் கேரி ஓல்ட் மேன் ஒரு நாடக நடிகர், இயக்குநர் மற்றும் திரைப்பட நடிகர். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர், கோல்டன் க்ளோப், பாப்டா உள்ளிட்ட பல விருதுகளை தனது சிறந்த நடிப்புக்காக வென்றவர். ஜேஎப்கே, குங்ஃபூ பாண்டா 2, ப்ளானட் 51, லாலெஸ், தி ஸ்பேஸ் பெட்வீன் அஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Oscar 2018: Best actors Gary Oldman, Frances McDermond

ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட்

60 வயதான ப்ரான்சிஸ் மெக்டர்மான்ட் அமெரிக்க நடிகை. நியூயார்க் நகரைச் சேர்ந்த இவரும் அடிப்படையில் ஒரு நாடக நடிகைதான். வொண்டர் பாய்ஸ், மடகாஸ்கர் 3, தி குட் டைனோசர் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X