twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் 2018: சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்... A Fantastic Woman! #Oscar2018

    By Shankar
    |

    Recommended Video

    90 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா!- வீடியோ

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதினை எ ஃபென்டாஸ்டிக் வுமன் படம் தட்டிச் சென்றது. சிலி நாட்டைச் சேர்ந்த படைப்பு இது.

    அகாடமி விருதுகள் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகளுக்கு இது 90வது ஆண்டு. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொட்டும் மழைக்கு மத்தியில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது ஆஸ்கர் விருது வழங்கும் விழா.

    Oscar 2018: A Fantastic Woman wins best foreign language film

    விழாவின் முதல் விருது சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்துக்கானது. அதனை சிலி நாட்டில் உருவான எ ஃபென்டாஸ்டிக் வுமன் (A Fantastic Woman) படம் வென்றது.

    க்றிஸ்டோபர் நோலனின் டன்கிர்க் படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. 13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தி ஷேப் ஆப் வாட்டருக்கு இதுவரை 1 விருது மட்டும் கிடைத்துள்ளது.

    விழாவில் இதுவரை வழங்கப்பட்டுள்ள விருதுகள்:

    சிறந்த துணை நடிகர் சாம் ராக்வெல் (Three Billboards Outside Ebbing, Missouri)

    சிறந்த துணை நடிகை: அலிசன் ஜேனி (I, Tonya)

    சிறந்த அனிமேஷன் படம்: கோகோ

    சிறந்த விஷுவல் எஃபக்ட்ஸ்: ப்ளேட் ரன்னர் 2049

    சிறந்த எடிட்டிங்: டன்கிர்க்

    சிறந்த சவுண்ட் டிசைனிங்: டன்கிர்க்

    சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: தி ஷேப் ஆப் வாட்டர்

    சிறந்த உடைகள்: பாந்தம் த்ரெட்

    சிறந்த மேக்கப் & சிகையலங்காரம்: டார்கஸ்ட் அவர்

    சிறந்த அனிமேஷன் குறும்படம்: டியர் பாஸ்கட் பால்

    சிறந்த டாகுமென்டரி படம்: இகாரஸ் (Icarus)

    English summary
    Chilean feature film A Fantastic Woman has won the best foreign language film in Oscar 2018
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X