ஆஸ்கர் மேடையில் சர் ரோஜர் மூர், ஸ்ரீதேவி, சசிகபூருக்கு அஞ்சலி
Recommended Video

ஶ்ரீதேவிக்கு ஆஸ்கர் விருது விழாவில் அஞ்சலி!- வீடியோ
லாஸ் ஏஞ்சல்ஸ்: 90வது ஆஸ்கர் விருது விழாவில் மறைந்த நடிகர்கள் ஸ்ரீதேவி மற்றும் சசிகபூருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆஸ்கர் விருது விழாவில் இன்று ஹாலிவுட் படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது வழங்கப்பட்டதும், மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

அதில் மறைந்த பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் சர் ரோஜர் மூர், ஜோனதன் டெமி, ஜான் ஹெட், டான் ரிக்கிள்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய நடிகர்கள் ஸ்ரீதேவி மற்றும் சசி கபூர் ஆகியோருக்கும் இந்த மேடையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. டாம் ப்ரெட்டியின் ரூம் அட் தி டாப் (Room at the Top...) பாடலைப் பாடி அஞ்சலி செலுத்தினார் எட்டி வெட்டார்.


Click it and Unblock the Notifications











