தலா 2 விருதுகளை தட்டிதூக்கிய 3 படங்கள்.. 3 விருதுகளை குவித்த நோமட்லேண்ட்.. சிறந்த படம் இதுதான்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: மாங்க், சவுண்டு ஆஃப் மெட்டல் உள்ளிட்ட மூன்று படங்கள் தலா இரண்டு விருதுகளை தட்டிச் சென்றுள்ளன.
93வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி திரையரங்கில் நடைபெற்று வருகிறது.
பல இடங்களில் விருது விழாவை பார்க்கும் வகையில் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விருதுகளுக்கு நாமினேட்டான பிரபலங்கள் அசத்தல் உடையில் ஒய்யாரமாய் பங்கேற்றுள்ளன.

டல்லாக நடைபெறும் ஆஸ்கர்
விர்ட்சுவல் முறையில் விருதுகள் அறிவிக்கப்பட சினிமா நட்சத்திரங்கள் பெற்றுக்கொள்கின்றனர். கொரோனா காரணமாக வழக்கத்திற்கு மாறாக விருது விழா சற்று டல்லாகதான் நடைபெற்று வருகிறது.

தலா 2 விருதுகள்
இதில் நான்கு திரைப்படங்கள் தலா இரண்டு விருதுகளை தட்டிச்சென்றுள்ளன. மாங்க், சவுண்ட் ஆஃப் மெட்டல், நோமட்லேண்ட் மற்றும் சோல் ஆகிய 4 திரைப்படங்கள் தலா இரண்டு விருதுகளை பெற்றுள்ளன.

மாங்க் - 2 விருதுகள்
அதன்படி மாங்க் திரைப்படம் சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. அப்படத்தின் ஒளிப்பதிவாளரான Erik Messerschmidt பெற்றுக்கொண்டார். இதேபோல் மாங்க் திரைப்படம் சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதையும் பெற்றுள்ளது. இந்த விருதை டொனால்டு கிரஹாம் பர்ட் மற்றும் ஜான் பஸ்கேல் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சவுண்ட் ஆஃப் மெட்டல்
சவுண்ட் ஆஃப் மெட்டல் திரைப்படமும் தலா இரண்டு விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த எடிட்டிங்கிற்கான விருது சவுண்ட் ஆஃப்மெட்டல் திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படத்தின் தொகுப்பாளரான மைகேல் இ ஜி நெல்சன் விருதை பெற்றார்.

5 பேர்..
சிறந்த ஒலிக்கான விருதையும் சவுண்ட் ஆஃப் மெட்டல் திரைப்படம் பெற்றுள்ளது. இந்த விருதை நிக்கோலஸ் பெக்கர், ஜாமி பக்ஷ்த், மிச்செல்லி, கார்லோஸ் மற்றும் பிலிப் பிலாத் ஆகிய 5 பேர் பெற்றுக்கொண்டர்.

சிறந்த இசை
இதேபோல் சோல் திரைப்படமும் தலா இரண்டு விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. சிறந்த அனிமேட்டட் ஃபீட்சர் பிலிமுக்கான விருது இப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெட் டாக்டர் மற்றும் டானா முரே இந்த விருதை பெற்றுக்கொண்டனர். மேலும் சிறந்த இசைக்கான விருதையும் இப்படம் தட்டியுள்ளது.

சீன பெண் இயக்குநர்
சிறந்த இயக்குநருக்கான விருது நோமட்லேண்ட் திரைப்படத்திற்காக சீன பெண் இயக்குநரான க்ளோயி சாவ்வுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆஸ்கர் விருதை பெறும் இரண்டாவது பெண் இயக்குநர் என்ற பெருமையை பெற்றுள்ளார் க்ளோயி சாவ்.

நோமட்லேண்ட்
சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் நோமட்லேண்ட் திரைப்படம் தட்டி தூக்கியுள்ளது. ஃபிரான்சஸ், பீட்டர், மோல்லி, டான் ஜான்வே, க்யோயி சாவ் மற்றும் தயாரிப்பாளர்கள் இந்த விருதை பெற்றுக்கொண்டனர்.

நோமட்லேண்டுக்கு 3 விருதுகள்
இதேபோல் சிறந்த நடிகைக்கான விருதும் நோமட்லேண்ட் திரைப்படத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடித்த பிரான்சிஸ் மெக்டார்மண்ட்டுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 3 ஆஸ்கார் விருதுகளை நோமட்லேண்ட் படம் குவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











