சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது.. டென்மார்க்கின் அனதர் ரவுண்டு படத்திற்கு அறிவிப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான விருது டென்மார்க் நாட்டின் அனதர் ரவுண்டு திரைப்படம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது விழா கோலாகலமாய் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது விழா இன்று தொடங்கியுள்ளது.

தொகுப்பாளர்கள் இன்றி..
கடந்த பிப்ரவரி மாதமே நடைபெற வேண்டிய 93 வது ஆஸ்கர் விருது விழா இரண்டு மாதங்கள் தாமதமாக இன்று நடைபெறுகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர்கள் இன்றி விருது விழா நடைபெறுகிறது.

லாஸ் ஏஞ்சல்ஸ்
லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய இடங்களில் ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட திரைத்துறை பிரபலங்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சிவப்புக் கம்பள வரவேற்பில் பங்கேற்றுள்ளனர்.

300க்கும் மேற்பட்ட படங்கள்
நகைச்சுவை நடிகர் பென்னி ஸ்கின்னர், நடிகை மேரி பெத் உள்ளிட்டோர் விர்ட்சுவல் முறையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். சிறந்த நடிகர், நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த நகைச்சுவை நடிகர், நடிகை, துணை நடிகர், நடிகை என ஆஸ்கர் விருதுக்கு 300க்கும் மேற்பட்ட படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

சிறந்த மூல கதை
இதில் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட படங்களின் பட்டியல் வெளியானது. இந்நிலையில் இன்று தொடங்கிய ஆஸ்கர் விருது விழாவில் முதலாவதாக சிறந்த மூல திரைக்தைக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது ப்ராமிஸ்ங் யங் வுமன் திரைப்படம்.

சிறந்த வெளிநாட்டு படம்
சிறந்த தழுவல் கதைக்கான ஆஸ்கர் விருதை தி ஃபாதர் திரைப்படம் தட்டிச்சென்றுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை டென்மார்க் நாட்டின் அனதர் ரவுண்ட் திரைப்படம் பெற்றுள்ளது.

சிறந்த துணை நடிகர்
சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை டேனியல் கல்லுயா Judas and the Black Messiah - திரைப்படத்திற்காக பெற்றார். சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கார் விருதை Ma Reini's Black Bottom திரைப்படத்திற்காக செர்கியோ லோபெஸ் பெற்றார்.


Click it and Unblock the Notifications











