twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் 2021 : சிறந்த இயக்குனர் விருதை சோலி ஜாவோ வென்றார்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ் : நோமட்லாண்ட் படத்திற்காக சீனப்பெண் சோலி ஜாவோ சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

    மேலும், இயக்குனருக்கான விருதை பெற்ற இரண்டாவது பெண்மணி என்ற கௌரவத்தையும் இவர் பெற்றுள்ளார்

    Oscar 2021 Chole Zhae Wins Best Director Award for Nomadland

    2021ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தற்போது நடந்து வருகிறது. அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) இந்த விருதுகளை ஏற்பாடு செய்துள்ளது.

    ஆஸ்கார் என்றும் அழைக்கப்படும் இந்த விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய இரு இடங்களிலிருந்து நடைபெறுகிறது. டால்பி தியேட்டர் 2001 முதல் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கணவனை இழந்தப் பெண் ஒரு நாடோடியாக சுற்றித்திரிகிறாள் . மேலும் இந்த கதாபாத்திரத்தில், பிரான்சிஸ் மெக்டார்மண்ட் நடித்தார். இத்திரைப்படம், 2020ம் ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் கோல்டன் லயனை வென்றது. மேலும், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் மக்கள் தேர்வு விருதையும் வென்றது.

    ஆஸ்கர் 2021… சிறந்த கதை தழுவலுக்கான விருதை வென்றது.. த ஃபாதர் திரைப்படம் ! ஆஸ்கர் 2021… சிறந்த கதை தழுவலுக்கான விருதை வென்றது.. த ஃபாதர் திரைப்படம் !

    2020ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பாராட்டுக்களை பெற்றது . மேலும், இந்த படம் அதன் இயக்கம், திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு மற்றும் நடிப்பால் பலரின் பாராட்டுக்களை பெற்றது.

    தற்போது இந்த நோமட்லாண்டின் திரைப்படத்திற்காக சோலி ஜாவோ சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றார். இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை பெற்ற இரண்டாவது பெண்மணி என்ற கௌரவத்தையும் இவர் பெற்றுள்ளார்.

    English summary
    Oscar 2021 Chole Zhae Wins Best Director Award for Nomadland
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X