3 முக்கிய விருதுகளை அள்ளிக்குவித்த நோமட்லேண்ட் திரைப்படம்.. இந்த ஆண்டு அதிக விருதுகளை குவித்த படம்!
,
லாஸ் ஏஞ்சல்ஸ்: Nomadland திரைப்படம் 93வது ஆஸ்கர் விருது விழாவில் முக்கிய மூன்று விருதுகளை குவித்துள்ளது.
93வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள யூனியன் ஸ்டேஷன் மற்றும் கலிஃபோர்னியாவில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று நடைபெற்றது.
இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தொகுப்பாளர் இன்றி விர்ட்சுவல் முறையில் இந்த ஆண்டு விருது விழா நடத்தப்பட்டது.

முக்கிய விருதுகள்
இதில் நோமட்லேண்ட் திரைப்படம் அதிகளவாக 3 மூன்று விருதுகளை குவித்துள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் என மூன்று முக்கிய விருதுகளையும் இப்படம் தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த இயக்குநர்
நோமட்லேண்ட் திரைப்படத்திற்காக க்ளோயீ சாவ் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றுள்ளார். இதன்மூலம் ஆஸ்கர் விருதை பெறும் இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் க்ளோய் சாவ்.

சிறந்த படம் சிறந்த நடிகை
இதேபோல் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் நோமேட்லேண்ட் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதும் நோமட்லேண்ட் திரைப்படமே தட்டிச்சென்றுள்ளது. இப்படத்தில் நடித்த நடிகை ஃப்ரான்சிஸ் மெக்டார்மண்ட் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார்.

அதிக விருதுகள்
சவுண்ட் ஆஃப் மெட்டல், சோல், மாங்க் ஆகிய மூன்று படங்கள்
தலா 2 விருதுகளை பெற்ற நிலையில் நோமட்லேண்ட் திரைப்படம் 3 விருதுகளை குவித்து இந்த ஆண்டின் அதிக ஆஸ்கர் விருதுகளை பெற்ற திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











