Oscar Awards 2019: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே நிலை... தொகுப்பாளர் இல்லாத ஆஸ்கர் விருது!
தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது விழா நடைபெற்று வருகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்று வருகிறது.
91வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் தற்போது நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஓரிச்சேர்க்கையாளர் தொடர்பாக கருத்த தெரிவித்தது காரணமாக விழாவின் தொகுப்பாளராக நியமிக்கப்பட்ட கெவின் ஹார்ட் விலகினார். இதையடுத்து, தற்போது ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்று வருகிறது.
30 ஆண்டுகள் கழித்து தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது விழா நடக்கிறது. கடந்த 1989 ஆம் ஆண்டு இதேபோல் தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications