twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Oscar Awards 2019: ஆஸ்கர் விருது வென்ற ‘பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்’.. எதைப் பற்றிய படம் தெரியுமா?

    மாதவிடாய் குறித்து இந்தியாவில் நிலவும் மூட நம்பிக்கைகளை பற்றிய ஆவணப் படம் தான் பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்.

    |

    சென்னை: பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்து இந்தியாவில் நிலவும் மூட நம்பிக்கைகளை பற்றிய ஆவணப் படம்தான் பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ்.

    91வது ஆஸ்கர் விருதில், சிறந்த ஆவண குறும்படமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது பீரியட் எண்ட் ஆப் சென்டன்ஸ். இந்த படத்தை ஈரானிய - அமெரிக்க இயக்குனரான ரைகா ஜெஹ்தாப்சி இயக்கியுள்ளார்.

    Oscar awards 2019: What is Period end of sentence all about?

    மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து இந்திய பெண்கள் எப்படி போராடுகிறார்கள் என்பது பற்றியது தான் 'பீரியட் எண்ட் ஆஃப் சென்டென்ஸ்' ( period end of sentence) எனும் ஆவண குறும்படம். இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள பெண்களிடம் பேட்டி கண்டு, சுமார் 26 நிமிடங்களுக்கு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    Oscar awards 2019: What is Period end of sentence all about?

    விலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் இந்த ஆவணப் படத்தில் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். நாப்கின் பிரச்சினை என்பது ஒரு இந்திய பெண்ணுக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை அவர் தெரிவித்திருப்பார்.

    அதன் அடிப்படையில் ஒரு தமிழரின் பங்களிப்போடு, எடுக்கப்பட்ட ஒரு ஆவணப் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த ஆஸ்கர் விருது. எனவே, முருகானந்தம் மற்றும் அரவது குழுவிற்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

    Oscars 2019: அது தானே, அதே தான்- ஆஸ்கர் மேடையில் நடந்த சுவாரஸ்யம் Oscars 2019: அது தானே, அதே தான்- ஆஸ்கர் மேடையில் நடந்த சுவாரஸ்யம்

    English summary
    The Oscar winning documentary Period end of sentence is all about how the women in India are facing many problems with menstrual cycle.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X