ஆஸ்கர் 2020: அள்ளி குவித்த பாராசைட்.. எந்ததெந்த படங்களுக்கு எத்தனை விருது.. முழு விபரம் இதோ!

Recommended Video

List of all the winners at Oscars 2020 - Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: 92வது ஆஸ்கர் விருது விழா இன்று கோலாகலமாக நடைபெற்ற நிலையில் விருது பெற்ற படங்களின் முழு பட்டியல் இதோ..

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கர் விருது விழா மிகுந்த எதிர்பார்ப்புக்கு பின் இன்று நடைபெற்றது. இந்த விருது விழாவை உலகமே உச்சக்கட்ட ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தது.

இதில் 24 பிரிவுகளின் கீழ் பல படங்கள் நாமினேட் செய்யப்பட்டிருந்தன. வழக்கம் போல சில படங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை குவித்தன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில படங்கள் ஒரு விருதை கூட பெறாமல் ஏமாற்றமடைந்தன.

4 விருதுகள் குவிப்பு

4 விருதுகள் குவிப்பு

இந்நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற படங்களின் முழு பட்டியலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தென்கொரியாவின் பாராசைட் திரைப்படம் சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த படம்ஆகிய பிரிவுகளில் 4 ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கிறது. இதன் மூலம் 2020 ஆஸ்கர் விழாவில் அதிக விருதுகளை குவித்த படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது தென்கொரியாவின் பாராசைட் படம்.

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகருக்கான விருதை பிராட் பிட் பெற்றுள்ளார். ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார் நடிகர் பிராட் பிட். சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றார் லாரா டெர்ன். மேரேஜ் ஸ்டோரி படத்தில் நடித்ததற்காக லாரா டெர்னுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. நடிகை லாரா டெர்ன் நாளை தனது 53வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில் அவருக்கு பிறந்த நாள் பரிசாக இந்த விருது கிடைத்துள்ளது.

காஸ்ட்யூம் டிசைன்

காஸ்ட்யூம் டிசைன்

சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை பெற்றது டாய் ஸ்டோரி - 4 என்ற படம் பெற்றிருக்கிறது. சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது ஹேர் லவ் என்ற படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த தழுவல் கதைக்கான ஆஸ்கர் விருதை ஜோஜோ ராபிட் படம் பெற்து. சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது லிட்டில் வுமன் படத்திற்கு வழங்கப்பட்டது.

சிறந்த குறும்படம்

சிறந்த குறும்படம்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருது ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த குறும்படத்திற்கான விருதை தி நெய்பர்ஸ் விண்டோ படம் தட்டிச்சென்றது. சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருது அமெரிக்கன் ஃபேக்டரி என்ற படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த குறு ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது லேர்னிங் டூ ஸ்கேட்போர்டு இன் எ வார்ஸோன் (இஃப் யூ ஆர் எ கேர்ள்) படத்திற்கு வழங்கப்பட்டது

1917க்கு 3 விருதுகள்

1917க்கு 3 விருதுகள்

சிறந்த சவுண்டு மிக்ஸிங்குக்கான ஆஸ்கர் விருதை 1917 திரைப்படம் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதையும் 1917 திரைப்படம் பெற்றது. மேலும் சிறந்த விஷ்வல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதும் 1917 படத்திற்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் 1917 திரைப்படம் 2020ஆம் ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவில் 3 விருதுகளை அள்ளியிருக்கிறது.

இரண்டு விருதுகள்

இரண்டு விருதுகள்

சிறந்த சவுண்ட் எடிட்டிங்குக்கான ஆஸ்கர் விருது ஃபோர்டு வி ஃபெராரி படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த எடிட்டிங்கிற்கான ஆஸ்கர் விருதும் ஃபோர்டு வி ஃபெராரி படத்திற்கே வழங்கப்பட்டது இதன் மூலம் ஃபோர்டு வி ஃபெராரி திரைப்படமும் 92வது ஆஸ்கர் விருது விழாவில் இரண்டு விருதுகளை அள்ளியிருக்கிறது.

ஜோக்கர் படத்திற்கு 2

ஜோக்கர் படத்திற்கு 2

சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருது ஜோக்கர் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான விருதையும் ஜோக்கர் படம் பெற்றிருக்கிறது. அப்படத்தின் நாயகன் ஜாக்கீன் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருக்கிறார். இதன் மூலம் 2020 ஆஸ்கர் விழாவில் ஜோக்கர் படம் 2 விருதுகளை பெற்றிருக்கிறது.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ஜுடி படத்திற்காக நடிகை ரெனீ ஸெல்வெஜர் பெற்றிருக்கிறார். சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது ராக்கெட்மேன் படத்தில் இடம் பெற்ற (ஐ அம் கோன்னா) லவ் மீ அகைய்ன் பாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருது பாம்ஷெல் படத்திற்கு வழங்கப்பட்டது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X