ஆஸ்கர் விருதுகள் 2020… கோலாகலமாக தொடங்கியது ஆஸ்கர்.. உங்க ஃபேவரைட் நடிகர்களின் க்யூட் மொமண்ட்ஸ்!

Recommended Video

List of all the winners at Oscars 2020 - Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: 92வது ஆஸ்கர் திருவிழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

உலகளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர்கள் ரெட்கார்ப்பெட் அணிவகுப்பை முடித்து, ஆஸ்கர் மேடைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

ஜோக்வின் பீனிக்ஸ், லியானார்டோ டிகாப்ரியோ, ஸ்கார்லெட் ஜோஹன்சன், பிராட் பிட், பிரை லார்சன் உள்ளிட்ட ஃபேவரைட் நட்சத்திரங்களின் க்யூட் மொமண்ட்ஸை காணுங்கள்..

டைட்டானிக் ஹீரோ

டைட்டானிக் படத்தின் மூலம் உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ, இந்த ஆண்டும் சிறந்த நடிகருக்கான போட்டியில் வலுவாக உள்ளார். பிளாக் கலர் டெக்ஸிடோ உடை அணிந்து க்யூட்டாக ஸ்மைல் செய்து ரசிகர்களை வசீகரித்து வருகிறார். Once Upon a Time in Hollywood படத்திற்காக அவருக்கு விருது கிடைக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிராட் பிட்

பிராட் பிட்

அதே படத்தில் லியானார்டோ டிகாப்ரியோ உடன் நடித்த மற்றொரு ஹாலிவுட் படமான பிராட் பிட்டும் விழா மேடைக்கு கோட் ஷூட் போட்டு கெத்தாக வருகை தந்துள்ளார். குவென்டின் டரன்டினோ இயக்கத்தில், ப்ரூஸ் லீயை அடித்து பறக்க விட்ட பிராட் பிட்டுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.

ஸ்கார்லெட் ஜோஹன்சன்

பிளாக் விடோவாக அவெஞ்சர்ஸ் படங்களில் நடித்து அசத்திய ஸ்கார்லெட் ஜோஹன்சன், இந்த வருட ஆஸ்கர் விருது விழாவில், மேரேஜ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த நடிகை பிரிவிலும், ஜோ ஜோ ராபிட் படத்திற்காக சிறந்த துணை நடிகை பிரிவிலும் போட்டியிடுகிறார். ஒரு விருதா அல்லது டபுள் ட்ரீட்டா என்பது இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.

பிரை லார்சன்

பிரை லார்சன்

மார்வெல் உலகின் அதிக சக்தி படைத்த சூப்பர் ஹீரோவான கேப்டன் மார்வெலாக நடித்த பிரை லார்சன், செம்ம செக்ஸியாக உடை அணிந்து ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சிகப்பு கம்பள அணிவகுப்பில், ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்திய பிரை லார்சன் ஆஸ்கர் விழாவையும் சிறப்பிக்க உள்ளார்.

ஜோக்கர்

டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் அடித்துள்ள ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்வின் பீனிக்ஸ் ஆஸ்கர் விருது மேடைக்கு கோட் சூட் போட்டு ஒய்யாரமாக வந்துள்ளார். அவரது முகத்தில் தவழும் புன்னகையே, இந்த ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை அவருக்கு பெற்று தரும் என எதிர்பார்க்கிறோம். நிச்சயம் கிடைக்கும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X