ஆஸ்கர் விழாவில் நினைவுகூரப்பட்ட நடிகர் இர்ஃபான் கான்.. கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்திற்கு விருது!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருதுவிழாவில் மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் கவுரவிக்கப்பட்டார்.
உலகளவில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது.
வழக்கமாக டால்பி திரையரங்கில் நடைபெறும் ஆஸ்கர் விருது விழா இம்முறை கொரோனா காரணமாக யூனியன் ஸ்டேஷன் நகரிலும் நடைபெற்றது.

பல்வேறு பிரிவுகளில்
மேலும் தொகுப்பாளர்கள் இன்றி விர்ட்சுல் முறை விருது விழா நடைபெற்றது. இதில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆவணப்படம், சிறந்த குறும்படம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

நோமட்லேண்ட் 3 விருதுகள்
இதில் அதிகப்பட்சமாக நோமட்லேண்ட் திரைப்படம் 3 விருதுகளை குவித்து சாதனை படைத்துள்ளது. நோமட்லேண்ட் திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநருக்கான 3 விருதுகளை பெற்றுள்ளது.

டெனட் படத்திற்கு விருது
இதில் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான விருது கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான டெனெட் படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே மற்றும் ஸ்காட் பிஸ்சர் ஆகிய நால்வரும் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த நடிகர்
மேலும் மறைந்த நடிகர் சாட்விக் போஸ்மேனுக்கு Ma Rainey's Black Bottom திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் த ஃபாதர் திரைப்படத்திற்காக ஆன்டனி ஹாப்கின்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

இர்ஃபான் கானுக்கு கவுரம்
இதனிடையே 93வது ஆஸ்கர் விருது விழாவின் நினைவேந்தல் பிரிவில் மறைந்த பாலிவுட் நடிகர் இர்பான் கான் கவுரவிக்கப்பட்டார். இதேபோல் சாட்விக் போஸ் மேன், பானு அதையா ஆகியோரும் நினைவுகூறப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications











