சிறந்த இயக்குநர்.. ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய சீனப் பெண்..உலக சினிமாவை உற்றுநோக்க வைத்த இவர் யார்?

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த இயக்குநருக்கான விருதை சீன பெண் இயக்குநரான க்ளோய் சாவ் பெற்றுள்ளார்.

க்ளோய் சாவ் சீனாவின் பெய்ஜிங் நகரை பூர்விகமாக கொண்டவர். 39 வயதான க்ளோய் சாவ், Songs My Brothers Taught Me என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

2015ஆம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 2017ஆம் ஆண்டு தி ரைடர் என்ற படத்தை இயக்கினார்.

நல்ல விமர்சனம்

நல்ல விமர்சனம்

தி ரைடர் படம் அசத்தல் விமர்சனங்களை பெற்றது. இப்படம் இன்டிபெண்டன்ட் ஸ்பிரிட் விருதுக்காக சிறந்த படம், சிறந்த இயக்குநர் ஆகிய பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டது.

நிரூபித்த க்ளோய் சாவ்

நிரூபித்த க்ளோய் சாவ்

இந்நிலையில் நோமட்லேண்ட் திரைப்படத்தின் மூலம் உலக சினிமா அரங்கில் ஆஸ்கர் அகாடமி விருதுகளை குவித்து தன்னை தலைச்சிறந்த ஒரு இயக்குநராக நிரூபித்துள்ளார் க்ளோய் சாவ். நோமட்லேண்ட் திரைப்படம் ஏற்கனவே பல்வேறு விருதுகளை குவித்துள்ளது.

பல விருதுகள்

பல விருதுகள்

கடந்த ஆண்டு வெளியான நோமட்லேண்ட் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான கோல்டன் குளோப் விருது, இயக்குநர்கள் கில்ட் ஆஃப் அமெரிக்கா விருது அகடமி விருதுகள், பிரிட்டிஷ் அகடமி பிலிம் விருதுகள் என பல விருதுகளை குவித்துள்ளார் க்ளோய் சாவ்.

முதல் ஆசிய பெண்

முதல் ஆசிய பெண்

இதன்மூலம் இந்த விருதுகளை பெற்ற இரண்டாவது பெண் மற்றும் முதல் ஆசிய பெண் என்ற பெருமையை பெற்றார் க்ளோய் சாவ். வெனிஸ் பிலிம் ஃபெஸ்டிவல், பீப்பிள் சாய்ஸ் அவார்டு, டொரான்டோ இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆகிய விருது விழாக்களிலும் நோமட்லேண்ட் திரைப்படம் விருதுகளை குவித்துள்ளது.

மூன்று ஆஸ்கர் விருதுகள்

மூன்று ஆஸ்கர் விருதுகள்

மேலும் 93வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை என மூன்று விருதுகளை குவித்து உலகை உற்று நோக்க வைத்துள்ளார் க்ளோய் சாவ். தற்போது எட்டர்நல்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார் க்ளோய் சாவ். இந்தப் படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

கணவர் ஒளிப்பதிவாளர்

கணவர் ஒளிப்பதிவாளர்

க்ளோய் சாவ் கலிஃபோர்னியாவின் ஓஜாய் நகரில் வசித்து வருகிறார். இவரது கணவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஜோஷ்வா ஜேம்ஸ் ரிச்சர்ட்ஸ் ஆவார். செல்ல பிராணிகளை வளர்க்க அதிகம் ஆர்வம்காட்டி வரும் சாவ், மூன்று கோழிகள் மற்றும் இரண்டு நாய்களை வளர்த்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X