twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருது 2022.... மாற்றுத்திறனாளி நடிகர்... கருப்பின நடிகை… ஆஸ்கர் சுவாரசியம் !

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ் : உலக அளவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையைச் சேர்ந்த ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகளின் மிகப்பெரிய கனவு என்றே கூறலாம்.

    உலகமே உற்றுநோக்கும் 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.

    இதில், காதுகேளாத நடிகர் டிராய் கோட்சர் மற்றும் கருப்பினத்தவரான அரியான டி போஸ்க்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

    50 ஆண்டு நிறைவு...ஆஸ்கர் விருது விழாவில் பெருமைப்படுத்தப்பட்ட காட்பாதர் படம் 50 ஆண்டு நிறைவு...ஆஸ்கர் விருது விழாவில் பெருமைப்படுத்தப்பட்ட காட்பாதர் படம்

    சிறந்த துணை நடிகை

    சிறந்த துணை நடிகை

    20 ஆண்டுகளுக்கு முன்பு ஹாலே பெர்ரி சிறந்த நடிகைக்கான விருதை வென்ற முதல் கறுப்பினப் பெண்மணி ஆனார். இதையடுத்து 20 வருடங்களுக்கு பின் சிறந்த துணை நடிகைக்கான விருதை இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் வெளியான வெஸ்ட் சைட் ஸ்டோரிஸ் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அரியனா டி போஸுக்கு வழங்கப்பட்டது.

    அழகான பேச்சு

    அழகான பேச்சு

    அப்போது பேசிய, அரியனா டி போஸ், இந்த சோர்வான உலகில் எங்கள் கனவுகள் நனவாகி உள்ளதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுடைய அடையாளம் எப்பொழுதும் கேள்வி கேட்கும், நீங்கள் கருப்பினத்தவராக இருந்தால், நான் உங்களுக்கு இந்த உறுதியை அளிக்கிறேன். உங்களுக்காக ஒரு இடம் இருக்கிறது என்றார். அனைவரும் இவரின் பேச்சை கேட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    சிறந்த துணை நடிகர்

    சிறந்த துணை நடிகர்

    கோடா படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மாற்றுத்திறனாளி நடிகர் டிராய் கோட்சர் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்று அசத்தினார். வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத நடிகரான டிராய் கோட்சர் சைகை மொழியில் ஆஸ்கர் விருதை வென்றுவிட்டு பேச அவருக்கு பதில் அருகே ஒரு நபர் அவருக்கு குரல் கொடுக்க ஒட்டுமொத்த அரங்கமே டிராய் கோட்சரை கைதட்டி பாராட்டியது.

    ஆச்சரியமான விஷயம்

    ஆச்சரியமான விஷயம்

    ஆஸ்கார் விருதை வென்ற முதல் காதுகேளாதவர் கோட்சூர் ஆவார். ஊனமுற்ற சமூகத்தில் உள்ள நடிகர்கள் ஊனமுற்ற கதாபாத்திரங்களில் நடிப்பது மிகவும் சிரமமானதாகும். அதுவும் ஆஸ்கார் விருதை வெல்லும் அளவுக்கு இவரின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது என்பதுதான் ஆச்சரியமான விஷயமாகும். CODA படத்தின் தயாரிப்பாளர்கள் காது கேளாத நடிகர்களை காது கேளாத கதாபாத்திரங்களாக மட்டுமே நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக வே இருந்தார். கோடா படத்தை பார்க்கும் போது, ​​ஃபிராங்க் கதாபாத்திரத்தில் கோட்சூரைத் தவிர வேறு யாரையும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கதாபாத்திரத்தை உணர்ந்து அழகாக அரவணைத்து நடித்திருப்பார்.

    English summary
    Oscar Awards 2022: Oscar Winners Including First Deaf Actor and a Women of Color Happy for Proud Moments
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X