ஆஸ்கர் விருதை தவறவிட்ட இந்திய ஆவணப் படம் ஆல் தட் ப்ரீத்ஸ்... நாமினேஷன் வரை சென்று ஏமாற்றம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 95வது ஆஸ்கர் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.

உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரிவுகளில் ஏராளமான திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட்டன.

ஆஸ்கர் 2023ல் இந்தியாவில் இருந்து ஆல் தட் ப்ரீத்ஸ் என்ற ஆவணப் படம் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், எதிர்பாராதவிதமாக ஆவண திரைப்பட பிரிவில் ஆல் தட் ப்ரீத்ஸ் திரைப்படம் ஆஸ்கர் விருதை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

95வது ஆஸ்கர் விருதுகள்

95வது ஆஸ்கர் விருதுகள்

2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவை பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம்மி கிம்மல் தொடங்கி வைத்தார். பேட்மேன் போல பறந்து வந்து ஆஸ்கர் மேடையில் இறங்கிய ஜிம்மி கிம்மல், வழக்கமான தனது நகைச்சுவைகளால் அரங்கத்தை அதிர வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு சிறியதாக ஒரு ஆட்டம் போட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

 ஆஸ்கர் விருதை தவறவிட்ட இந்திய ஆவணப் படம்

ஆஸ்கர் விருதை தவறவிட்ட இந்திய ஆவணப் படம்

95வது ஆஸ்கர் விழாவில் இந்தியாவில் இருந்து ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் விருது வென்றது. இதனிடையே ஆல் தட் ப்ரீத்ஸ் ஆவணப்பட பிரிவிலும், தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண குறும்படப் பிரிவிலும் நாமினேட் செய்யப்பட்டிருந்தன. சிறந்த ஆவணப் படத்துக்கான விருதில், இந்திய ஆவணப் படமான ஆல் தட் ப்ரீத்ஸ் ஆஸ்கர் விருதை தவறவிட்டது. இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 விருது வென்ற நவால்னி

விருது வென்ற நவால்னி

ஆல் தட் ப்ரீத்ஸ், நவல்னி, ஆல் தி பியூட்டி அண்ட் தி பிளட்ஷெட், ஃபயர் ஆஃப் லவ், எ ஹவுஸ் மேட் ஆஃப் ஸ்பிளிண்டர்ஸ் ஆகிய ஆவணப் படங்கள் இந்தப் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருந்தன. இதில், நவல்னி (Navalny) சிறந்த ஆவணப் படத்துக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. ஆவணப் பட பிரிவில் ஆல் தட் ப்ரீத்ஸ் கண்டிப்பாக ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

 ஆல் தட் ப்ரீத்ஸ்

ஆல் தட் ப்ரீத்ஸ்

ஷௌனக் சென் இயக்கிய ஆல் தட் ப்ரீத்ஸ் திரைப்படதை அவரே தயாரித்திருந்தார். காயம்பட்ட பறவைகளை மீட்டு சிகிச்சை அளிக்கும் இந்தியாவைச் சேர்ந்த சகோதரர்கள் முகமது சவுத், நதீம் ஷேஜாத் ஆகியோரை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியிருந்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஆல் தட் ப்ரீத்ஸ் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. கண்டிப்பாக ஆஸ்கர் விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஆல் தட் ப்ரீத்ஸ் ஏமாற்றத்துடன் வெளியேறியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X