Oscar Awards 2025: களைகட்டும் ஆஸ்கர் விழா.. ஒய்யாரமாக ரெட் கார்பெட்டில் நடந்து வந்த நடிகை!
சென்னை: அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா 96 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த படைப்புகள், கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக பல்வேறு பிரிவுகளில் விருகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், 97வது ஆஸ்கர் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில், ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ், சிறந்த படம், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என 13 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. ஆங்கில மொழி அல்லாத திரைப்படங்களில் அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட படம் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கான் ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வான முதல் திருநங்கையாவார்.அதுமட்டுமில்லாமல் புரூட்டலிஸ்ட் என்ற ஆங்கில படம் 11 பிரிவுகளிலும், விக்கட் என்ற படமும் 10 பிரிவுகளிலும் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.

களைகட்டிய விழா: ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கியது. இதில், அகாடமி முறைப்படி மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த விழாவை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் இந்த விழாவினை முதன்முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகரும் பாடகியுமான அரியானா கிராண்டே லாஸ் ஏஞ்சல்சில் காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேடையில் பாடினார். அவருடன் அவரது விக்ட் கோ-ஸ்டார் சிந்தியா எரிவோவும் உடன் இருந்தார். கோலாகலமாக தொடங்கிய இந்த விழாவிற்கு நடிகை நடிகைகள் ரெட் கார்பெட்டில் நடந்து வருகின்றனர். இதில் நடிகை Gal Gadot சிவப்பு கவுனில் ஒய்யாரமாக நடந்து வந்து பார்வையாளர்களை கவர்ந்தார்.

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: சிறந்த அனிமேஷன் திரைப்படமாக Flow wins தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதே போல, ஜெஸ்ஸி ஐசன்பெர்க் இயக்கிய எ ரியல் பெயின் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் கீரன் கல்கின் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.t


Click it and Unblock the Notifications











