twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லகான் படத்துக்கு அப்புறம் இந்தியாவில் நல்ல படங்களே வரவில்லையா.. ஏன் ஆஸ்கர் எட்டாக் கனியாக இருக்கு?

    |

    சென்னை: வரும் ஞாயிறு இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் ஆஸ்கர் விருது விழா நடைபெற உள்ளது.

    உலகளவில் ஆஸ்கர் விருதுக்கு மிகப்பெரிய மவுசு இருக்கிறது. சினிமா துறைக்கான உயரிய விருதாகவும் ஆஸ்கர் கருதப்படுகிறது.

    லகான் படத்திற்கு பிறகு இந்தியா சார்பில் ஒரு படமும் ஆஸ்கர் நாமினேஷனுக்கு கூட தேர்வாகவில்லை என்பது தான் இதில் வருத்தமான விஷயம்.

    ஆஸ்கர் விருதுகள்

    ஆஸ்கர் விருதுகள்

    அமெரிக்காவில் உள்ள அகாடமி விருதுகள் சார்பாக கடந்த 91 ஆண்டுகளாக ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் பிப்ரவரி 9ம் தேதி 92வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. ஆஸ்கர் விருதுகளில் பெரும்பாலும், ஹாலிவுட் படங்களுக்குத்தான் விருதுகள் வழங்கப்படும்.

    உலக நாடுகள் எதிர்பார்ப்பு

    உலக நாடுகள் எதிர்பார்ப்பு

    ஆஸ்கர் விருது பெற வேண்டும் என உலக நாடுகள் எதிர்பார்ப்பது ஏன்? என்ற கேள்விக்கு ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்படும் சிறந்த அயல் மொழிக்கான விருது மட்டுமே விடையாக உள்ளது. அந்த ஒரு பிரிவின் கீழ் நாமினேட் ஆவது ஆகிவிட மாட்டோமா என இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

    இந்தியா சார்பாக

    இந்தியா சார்பாக

    இந்தியா சார்பாக இதுவரை மூன்று படங்கள் ஆஸ்கர் விருதின் பரிந்துரை பட்டியல் வரை சென்றுள்ளது. 1957ம் ஆண்டு மதர் இந்தியா, 1989ம் ஆண்டு சலாம் பாம்பே மற்றும் 2001ம் ஆண்டு ஆமிர்கானின் லகான் உள்ளிட்ட மூன்று படங்கள் மட்டுமே இதுவரை இந்தியா சார்பாக ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வரை சென்றுள்ளது. ஆனால், அவையும் விருதை கைப்பற்றவில்லை.

    ஆஸ்கர் நாயகர்கள்

    ஆஸ்கர் நாயகர்கள்

    ஆனால், இந்தியா சார்பாக சில இந்தியர்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர். 2008ம் ஆண்டு வெளியான தி ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஒன்றுக்கு 2 ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியர்களாலும் ஆஸ்கர் விருதை பெற முடியும் என நிரூபித்தார். அதே படத்தில் சவுண்ட் மிக்ஸிங் செய்த ரசூல் பூக்குட்டியும் ஆஸ்கர் பெற்றார்.

    ஆஸ்கர் 2020

    ஆஸ்கர் 2020

    இந்தியா சார்பில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் சிறந்த படங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. தமிழில், பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7, விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், தனுஷின் வடசென்னை உள்ளிட்ட படங்களுடன் பாலிவுட் படமான கல்லி பாய் உள்ளிட்ட படங்கள் பட்டியலில் இருந்தன.

    திரும்பி வந்த கல்லி பாய்

    திரும்பி வந்த கல்லி பாய்

    ஜோயா அக்தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் வெளியான கல்லி பாய் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் போட்டியில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், இறுதி பரிந்துரை பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் கல்லி பாய் திரும்பி வந்தது. 84 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட இந்த படம் 238 கோடி வரை வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

    எதிர்பார்ப்பில் கொரிய படம்

    எதிர்பார்ப்பில் கொரிய படம்

    ஆஸ்கர் இறுதி பரிந்துரை பட்டியலில் இந்திய படம் இடம் பிடித்து விடாத என ஏங்கி வரும் நிலையில், கொரிய படமான பாராசைட், சிறந்த அயல் மொழி மற்றும் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வறுமையின் வலிகளை சொல்லும் பல படங்கள் ஆஸ்கரை தட்டிச் சென்றுள்ள நிலையில், இந்த படமும் ஆஸ்கரை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Mother India, Salaam Bombay and Lagaan are the only 3 Indian films to receive an official Oscars nomination.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X