ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ்ப்படங்கள்... கமல்தான் டாப்

சென்னை : ஆஸ்கர் விருது பட்டியலுக்கு சூர்யாவின் ஜெய் பீம் படம் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தப்படம் ஆஸ்கர் விருதை வெல்லுமா என்ற கேள்வி ஒவ்வொரு தமிழ் ரசிகனின் மனதிலும் எழுந்துள்ளது.

முன்னதாக ஆஸ்கர் பரிந்துரை வரை வந்து விருதை பெறாமல் தமிழ் படங்கள் வெளியேறிய சம்பவங்கள் நடந்துள்ளது.

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது

ஆஸ்கர் விருது என்பது திரையுலகில் ஒவ்வொருவரின் கனவாக காணப்படுகிறது. இந்த விருதை பெறுவதை தங்களது வாழ்நாள் கௌரவமாக ஒவ்வொரு கலைஞனும் கருதுகின்றனர். இந்த விருதை பெற்று நமது இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பெருமையை உலகிற்கு கொண்டு சென்றார் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான்.

ஆஸ்கரை பெறும் துடிப்பு

ஆஸ்கரை பெறும் துடிப்பு

அவரை தொடர்ந்து இந்த விருதை பெற்றுவிட வேண்டும் என்ற துடிப்பு ஒவ்வொரு இயக்குநரிடமும் காணப்படுகிறது. வெற்றிமாறனின் விசாரணை, சுதா கொங்கராவின் சூரரை போற்று போன்ற படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு கடைசியில் அந்த போட்டியிலிருந்து விலகின.

ஆஸ்கர் பரிந்துரையில் தெய்வமகன்

ஆஸ்கர் பரிந்துரையில் தெய்வமகன்

முன்னதாக கடந்த 42வது ஆஸ்கர் விருது வழங்கும் பட்டியலிலேயே சிவாஜியின் தெய்வமகன் படம் இடம்பெற்றிருந்தது. சிவாஜி 3 வேடங்களில் சிறப்பாக நடித்திருந்த இந்தப் படம் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் படம்.

கமலின் நாயகன் படம்

கமலின் நாயகன் படம்

தொடர்ந்து கடந்த 1987ல் வெளியான கமல் -மணிரத்னம் கூட்டணியில் வெளியான நாயகன் படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படம் உண்மைக் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது. மும்பையில் தாதாவாக செயல்பட்ட வரதராஜ முதலியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக இந்தப் படம் கொண்டிருந்தது.

ஆஸ்கர் பட்டியலில் அஞ்சலி

ஆஸ்கர் பட்டியலில் அஞ்சலி

தொடர்ந்து மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படமும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது. தாய் மற்றும் மகளின் பாசப் போராட்டத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் 63வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

ஆஸ்கர் பரிந்துரையில் கமலின் 5 படங்கள்

ஆஸ்கர் பரிந்துரையில் கமலின் 5 படங்கள்

தொடர்ந்து கமலின் தேவர் மகன், குருதிப்புனல் மற்றும் இந்தியன் ஆகிய படங்களும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன. தொடர்ந்து ஜீன்ஸ், ஹேராம், விசாரணை உள்ளிட்ட படங்களும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டன. கடந்த ஆண்டில் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் பரிந்துரை ஆனது.

ஆஸ்கரை கைநழுவிய தமிழ்படங்கள்

ஆஸ்கரை கைநழுவிய தமிழ்படங்கள்

இந்தப் படங்கள் அனைத்தும் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற நிலையில், ஆஸ்கர் விருதை அள்ளாமல் வெளியேறின. இந்நிலையில் சூர்யாவின் ஜெய் பீம் படம் இந்த ஆண்டில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஆஸ்கர் தேர்வுக்குழு

ஆஸ்கர் தேர்வுக்குழு

ஆஸ்கர் விருதுகளுக்கு இந்திய திரைப்படங்களை பெடரேஷன் ஆப் இந்தியா என்ற தேர்வுக்குழு தேர்வு செய்து அனுப்பி வருகிறது. இதில் மத்திய அரசுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அனுப்பிய பட்டியலில் மண்டேலா மற்றும் கூழாங்கல் போன்ற படங்கள் இடம்பெற்றிருந்தன.

ஓபன் கேட்டகரியில் ஜெய் பீம்

ஓபன் கேட்டகரியில் ஜெய் பீம்

இந்தப் பட்டியலில் ஜெய் பீம் படம் இடம்பெறாத நிலையில் தற்போது ஓபன் கேட்டகரியில் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆஸ்கரின் யூடியூப் பக்கத்திலும் இந்தப் படத்தின் காட்சிகள் மற்றும் இயக்குநரின் பேட்டி உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X