94th Oscar Nominations List .. சிறந்த இயக்குநர் பிரிவில்.. ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்!
லாஸ் ஏஞ்சல்ஸ் : 94வது ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் சிறந்த இயக்குநர் பிரிவில் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தேர்வாகி உள்ளார்.
மொத்தம் 23 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதிற்காக நாமினேட் செய்யப்பட்ட படங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக், யு டியூப் தளங்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
இந்த வருடத்திற்கான 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது.

ஸ்டீவன் ஸ்பில்பெர்க்
உலக சினிமாவின் வித்தகர் ஸ்டீவன் ஸ்பில்பெர்க். அவருடைய படங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனி சிறப்பு உண்டு. ஜூராசிக் பார்க் என்ற ஒரு அற்புதமான திரைப்படத்தை கொடுத்து, தமிழகத்தில் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தை குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு சென்று பார்க்க வைத்த பெருமை ஸ்டீவன் ஸ்பில் பெர்க்கையே சேரும்.

திரைப்படத்துறையின் வித்தகர்
சிலரால் சில தளங்களில் மட்டுமே பயணிக்க முடியும் ஆனால் ஸ்டீவன் ஸ்பில் பெர்க்கால், ஒரு கலைப்படமும் எடுக்க முடியும், கமர்ஷியல் படமும் எடுக்க முடியும், குழந்தைகளுக்கான திரைப்படமும் எடுக்க முடியும் அதனால் தான், திரைப்படத்துறையின் வித்தகர், பிதாமகர் என்று போற்றப்படுகிறார்.

வெஸ்ட் சைட் ஸ்டோரி
94வது ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் சிறந்த இயக்குநருக்கான பிரிவில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் பெயர் இடம்பெற்றுள்ளது. வெஸ்ட் சைட் ஸ்டோரி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து மிகுந்த பாராட்டைப் பெற்றது. பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்தது. இப்படத்தில், ஆன்சல் எல்கார்ட், அரியானா டிபோஸ், டேவிட் அல்வாரெஸ், மைக் ஃபைஸ்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.

இரண்டுஆஸ்கார் விருது
சினிமாவின் புதுமை விரும்பியான ஸ்டீவன் ஸ்பில்பெர்க்கின் பெயர் இதுவரை 6 முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் மற்றும் சேவிங் ப்ரைவேற் றையான் என்ற திரைப்படத்திற்காக இரண்டு முறை சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதினை வென்றுள்ளார். தற்போதும், ஸ்டீவன் ஸ்பில்பெர்க்கின் ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்டில் உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











