ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு... கிரேவிட்டி படத்துக்கு சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 விருதுகள்

By Shankar

லாஸ் ஏஞ்சல்ஸ்: 86வது ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கிரேவிட்டி படம் மட்டும் இதுவரை 7 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த இயக்குநருக்கான விருதினை இப்படத்தை இயக்கிய அல்போன்ஸோ கோரனுக்கு கிடைத்துள்ளது.

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

கிரேவிட்டி

கிரேவிட்டி

இதில் சிறந்த ஒளிப்பதிவு (எம்மானுவல் லுபஸ்கி), சிறந்த எடிட்டிங் (அல்போன்ஸோ கோரன், மார்க் சேஞ்ஜர்), சிறந்த சவுண்ட் எடிட்டிங் (க்ளென் ப்ரீமான்டில்), சிறந்த சவுண்ட் மிக்ஸிங் (ஸ்கிப் லெவ்சே, நிவ் அடிரி, க்றிஸ்டோபர்), சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் (டிம் வெப்பர், க்றிஸ் லாரன்ஸ்) போன்ற பிரிவுகளில் கிரேவிட்டி படம் விருதுகளைப் பெற்றுள்ளது.

சிறந்த இயக்குநர் - இசை

சிறந்த இயக்குநர் - இசை

சிறந்த இயக்குநருக்கான விருதினையும், சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான (ஸ்டீவன் பிரைஸ்) விருதினையும் கிரேவிட்டி படமே வென்றுள்ளது.

தி கிரேட் கேட்ஸ்பி

தி கிரேட் கேட்ஸ்பி

சிறந்த நடிகர், நடிகை, படம் போன்ற முக்கிய விருதுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கிரேவிட்டிக்கு அடுத்து தி கிரேட் கேட்ஸ்பி படம் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. சிறந்த புரொடக்ஷன் டிசைன், சிறந்த காஸ்ட்யூம் டிசைன் ஆகிய பிரிவுகளில் இந்தப் படம் விருது வென்றுள்ளது.

தி கிரேட் பியூட்டி

தி கிரேட் பியூட்டி

சிறந்த வெளிநாட்டு மொழிப்படத்துக்கான விருது தி கிரேட் பியூட்டி படத்துக்குக் கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகருக்கான விருது ஜாரெட் லெதோவுக்குக் கிடைத்துள்ளது. டல்லஸ் பையர்ஸ் க்ளப்புக்கு இந்த விருதினை அவர் பெற்றார்.

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகை

12 இயர்ஸ் ஸ்லேவ் படத்தில் நடித்த லுபிடா நியோங்கோவுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

சிறந்த அனிமேஷன் படம்

சிறந்த அனிமேஷன் படம்

சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருது ப்ரோஸன் படத்துக்குக் கிடைத்துள்ளது.

டல்லஸ் பையர்ஸ் க்ளப்

டல்லஸ் பையர்ஸ் க்ளப்

சிறந்த மேக்கப், ஹேர் ஸ்டைலுக்கான விருது டல்லஸ் பையர்ஸ் க்ளப் படத்துக்குக் கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X